3 ஆண்டுகள்... 30 நாடுகள்... உலகின் முதல் நீண்ட எலெக்ட்ரிக் வாகனப் பயணம்!

கிழக்கு ஐரோப்பா, ஈரான், இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 1,01,000 கி.மீ பயணித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 21, 2019, 7:13 PM IST
3 ஆண்டுகள்... 30 நாடுகள்... உலகின் முதல் நீண்ட எலெக்ட்ரிக் வாகனப் பயணம்!
Wiebe Wakker/Handout via REUTERS
Web Desk | news18
Updated: July 21, 2019, 7:13 PM IST
நெதர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது எலெக்ட்ரிக் காரில் உலகின் முதல் நீண்ட பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த வி.பி.வாக்கர் என்பவர் பெட்ரோல், டீசல் அல்லாத தனது எலெக்ட்ரிக் வாகனம் ‘ப்ளூ பேண்டிட்’ மூலமாக நீண்ட பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னையும் தனது பயணத்தையும் பின்பற்றுபவர்கள் தரும் நன்கொடைகள் மூலமாகவே உலகின் மிக நீண்ட எலெக்ட்ரிக் வாகனப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு தனது பயணத்தைத் தொடங்கிய வி.பி.வாக்கர் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரையில் 30 நாடுகளைக் கடந்துள்ளார். கிழக்கு ஐரோப்பா, ஈரான், இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 1,01,000 கி.மீ பயணித்துள்ளார்.


தனது பயணம் குறித்தும் அதில் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார் வாக்கர். ஒரு வழிப்போக்கனாகவே வாழ வாய்ப்பளித்த தனது பயணம் குறித்து வி.பி.வாக்கர் கூறுகையில், “கற்பனைக்கும் எட்டாத பயணத்தை மேற்கொள்ள நினைத்தேன். ஆம்ஸ்டர்டாமில் தொடங்கி உலகின் மறுமுனையை அடைய நினைத்தேன். முடியும் என்றும் நிரூபித்துள்ளேன்” என்றுள்ளார்.

மேலும் பார்க்க: 10 நாளில் 120 பேர் முன்பதிவு... நாட்டின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...