உலகின் மிகவும் மலிவான எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது..!

1984-ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய க்ரேட் வால் அந்நாட்டின் முதல் தனியார் கார் உற்பத்தி நிறுவனமாகும்.

உலகின் மிகவும் மலிவான எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது..!
Ora-R1
  • News18
  • Last Updated: January 3, 2020, 1:44 PM IST
  • Share this:
உலகின் மிகவும் மலிவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளது.

சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பல நாடுகளும் எலெக்ட்ரிக் காருக்காக மானியங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சீன நிறுவனமான ‘க்ரேட் வால் மோட்டார்’ உலகின் மலிவான எலெக்ட்ரிக் காராக Ora R1 அறிமுகம் ஆகியுள்ளது.

35kW மோட்டார் திறன் கொண்டதாக இந்த Ora R1 கார் உள்ளது. இந்தக் காரின் விலை இந்தியாவில் அறிமுகம் ஆகும்போது 6.2 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான பட்டியலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகம் ஆக உள்ளது.


இத்தகைய சூழலில் க்ரேட் வால் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க தகுந்த இடம் பார்த்து வருகிறதாம். 1984-ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய க்ரேட் வால் அந்நாட்டின் முதல் தனியார் கார் உற்பத்தி நிறுவனமாகும். கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான கார்களை விற்பனைச் சாதனை செய்து இந்நிறுவனம் பிரபலமானது.

மேலும் பார்க்க: 2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!
First published: January 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading