உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இரு சக்கர வாகனங்கள் முதல் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரை தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறன்றன. அதலும் பல்வேறு வகையான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், வசதிகள் உள்ளிட்ட அம்சங்களோடு எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி நாளுக்கு நாள் நவீனமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இரு சக்கர வாகன உற்பத்தியின் மற்றொரு அப்டேட்டான ஆட்டோ பேலன்சிங் ஸ்கூட்டரை தயாரித்து சாதனை படைத்துள்ளது இந்தியாவில் இருக்கும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று.
லைகர் மொபிலிட்டி என்னும் நிறுவனம் மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஐஐடி மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பி்சினஸ் கல்வி நிறுவனங்களின் பயின்ற முன்னாள் மாணவர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை நடைமுபை்பபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான் ஆட்டோ பேலன்சிங் ஸ்கூட்டர். ஆட்டோ பேலன்சிங் ஸ்கூடட்ர் என்றால் சைடு ஸ்டாண்ட் மற்றும் சென்டர் ஸ்டாண்ட் போன்ற எந்த உதவியும் இல்லாமல் இந்த ஸ்கூட்டர் இரு சக்கரங்களின் உதவியால் தானாக நிற்கும். அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஹோவர் போர்ட் எனப்படும் பேட்டரியால் இயங்கும் சக்கர வாகனங்கள் ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உலகில் முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருப்பது இது தான் முதல் முறை. அந்த சாதனையை படைத்திருக்கிறது இந்திய நிறுவனமான லைகர். இந்த ஆட்டோ பேலன்சிங் ஸ்கூட்டர் வரும் 13 ஆம் தேதி தொடங்க உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் காட்சிப்படுத்தப்பட உள்ளது. கண்ணைக் கவரும் வண்ணங்களில், ஸ்டைலான தோற்றதில் இந்த ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னும் பின்னும் எல்இடி லைட்களுடன் அசத்தலான வடிவமைப்பில் இந்த ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியிலேயே இந்த ஸ்கூட்டர்களுக்கான பேசிக் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது தான் முழுமையடைந்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் நெகஸ்ட் ஜென் வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டோ பேலன்சிங் ஸ்கூட்டர்களை காண பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile