ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

உலகின் முதலாவது எலெக்ட்ரிக் விமானம் தனது பயணத்தை நிறைவு செய்தது!

உலகின் முதலாவது எலெக்ட்ரிக் விமானம் தனது பயணத்தை நிறைவு செய்தது!

எலெக்ட்ரிக் விமானம்

எலெக்ட்ரிக் விமானம்

எலெக்ட்ரிக் விமானமானத்தின் அதிகபட்ச வேகம் 260 நாட்ஸ் ஆகும். 3 வேரியண்ட்களில் இந்த விமானம் வருகிறது. முதலாவது 9 சீட்டர் விமானம் ஆகும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பெட்ரோல், டீசலுக்கான மூல ஆதாரமாக திகழும் கச்சா எண்ணெய் வளம் நாளுக்கு, நாள் குறைந்து வரும் நிலையிலும், அவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்து வரும் நிலையிலும் மாற்று எரிபொருள் நோக்கி நகர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புதைவடிவ எரிபொருள்கள் மூலமாக வெளியேறும் நச்சு புகையானது சுற்றுச்சூழலுக்கு பெரும் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.

  இத்தகைய நிலையில், பசுமையான சுற்றுச்சூழலை உறுதி செய்யும் மின்சார வாகனங்களை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்து வருகிறது. இதேபோல ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட வாகனப் பயன்பாடும் மெல்ல, மெல்ல கொண்டு வரப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரையிலும் ஸ்கூட்டர், பைக், கார் போன்றவை நாம் வெகு இயல்பாக பார்க்கும் அளவுக்கு எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக எலெக்ட்ரிக் பேருந்துகள், லாரிகளும் கூட இயங்கி வருகின்றன.

  இந்த பரிணாம மேம்பாட்டின் அடுத்தகட்டமாக எலெக்ட்ரிக் விமானம் தயாரிக்கப்பட்டு, அதன் முதலாவது பயணமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது எலெக்ட்ரிக் விமானத்தின் பெயர் அலைஸ் ஆகும். ஏவியேஷன் ஏர்கிராஃப்ட் என்னும் நிறுவனம் இந்த விமானத்தை தயாரித்தது.

  Read more: காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை தொடக்கம்.. பீகார் அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர்!

  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலாவது பயணம் தொடங்கியது. சுமார் 3,500 அடி உயரத்தில் 8 நிமிடங்களுக்குப் பறந்து முதல் பயணம் நிறைவு செய்யப்பட்டது. ஏவியேஷன் எலைஸ் விமானத்தில் புகை வெளியேற்றம் என்பதே முற்றிலுமாக கிடையாது. இலகு ரக ஜெட் அல்லது உயர் ரக டர்போபிராப்ஸ் வகை விமானங்களின் ஒரு மணி இயக்க செலவை ஒப்பிடுகையில், அதில் சிறிய அளவிலான செலவுதான் எலெக்ட்ரிக் விமானத்திற்கு ஏற்படுகிறது.

  3 வேரியண்ட்கள்

  எலெக்ட்ரிக் விமானமானத்தின் அதிகபட்ச வேகம் 260 நாட்ஸ் ஆகும். 3 வேரியண்ட்களில் இந்த விமானம் வருகிறது. முதலாவது 9 சீட்டர் விமானம் ஆகும். இரண்டாவதாக 6 சீட்டர் கேபின் பிரிவு மற்றும் கார்கோ கொண்டதாகும். பயணிகள் விமானமானது அதிகபட்சம் 1,134 கிலோ எடையும், கார்கோ விமானமானது அதிகபட்சம் 1,179 கிலோ எடையும் தாங்கும். அனைத்து வேரியண்ட்களிலும் 2 பணியாளர்கள் இடம்பெறுவார்கள்.

  இதுகுறித்து ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவர் கிரிகோரி டேவிஸ் கூறுகையில், “விமானப் போக்குவரத்தின் அடுத்தகட்ட அத்தியாயத்தை இன்று நாங்கள் தொடங்கியிருக்கிறோம். மறக்க இயலாத, முதலாவது எலெக்ட்ரிக் விமானமான அலைஸ் மூலமாக வான்வெளியை மின்சாரமயமாக நாங்கள் மாற்றியிருக்கிறோம்’’ என்று கூறினார்.

  எதிர்கால இலக்கு

  ஒலி மாசு அல்லது இயக்க கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக கமர்ஷியல் விமானங்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமான நிலையங்களில் இருந்து எலெக்ட்ரிக் விமானத்தை இயக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 மைல்கள் முதல் 250 மைல்கள் தூரம் கொண்ட இடங்களுக்கு பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானத்தை இயக்குவதற்கு ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  அமெரிக்காவைச் சேர்ந்த  கேப் ஏர் மற்றும் குளோபல் கிராசிங் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் முறையே 75 மற்றும் 60 அலைஸ் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் தங்கள் சேவையில் அலைஸ் விமானங்களை பயன்படுத்த உள்ளதாக கேப் ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டான் வோல்ஃப் தெரிவித்தார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Flight