கிருஷ்ணகிரி : ஓலா இ-ஸ்கூட்டர் நிறுவனத்தில் 10,000 பெண்களுக்கு வேலை

OLA

கிருஷ்ணகிரியில் அமைந்து வரும் ஓலா இ-ஸ்கூட்டர் நிறுவனத்தில் முழுவதும் பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும் இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்று ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர். ஜெர்மன் டிசைன் விருது உள்பட சர்வதேச அளவில் பல விருதுகளை ஓலாவின் இந்த ஸ்கூட்டர் வென்றுள்ளது. முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் பூஜ்யத்தில் இருந்து 50 விழுக்காடு சார்ஜ் ஆவதற்கு வெறும் 18 நிமிடங்களே பிடிக்கும். அதன் மூலம் 75 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இதற்காக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது.

  ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முதல் அலகு தயாராகிவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதியில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பதுதான் அதன் இலக்கு. இந்தத் தொழிற்சாலையின் ஒரு பகுதி முதற்கட்ட உற்பத்தி பணிகளுக்காக இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  இதுகுறித்து அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா பியூச்சர்பேக்ட்ரி மொத்தமும் பெண்களால் இயங்கும் ஒரு தொழிற்சாலையாக இருக்கும் என்பதை அறிவிக்கப் பெருமையாக உள்ளது.  இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையையே மேம்படுத்தும்“ என்று பதிவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: