வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் CRPF பைக் ஸ்டன்ட்... குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி!

ஆசியாவிலேயே முதல் பெண்கள் CRPF அணி கடந்த 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் CRPF பைக் ஸ்டன்ட்... குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி!
CRPF (Image Credit: PTI)
  • News18
  • Last Updated: January 23, 2020, 1:07 PM IST
  • Share this:
வருகிற ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்றிலேயே முதன்முறையாக முழுவதும் பெண்கள் நிறைந்த CRPF பைக்கர்கள் ஸ்டன்ட் அரங்கேற்றத்தை நிகழ்த்துகிறார்கள்.

65 பெண்கள் நிறைந்த CRPF பைக்கர் அணி குடியரசு தின அணிவகுப்பின் போது 90 நிமிடங்களுக்கு 350cc ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் ஸ்டன்ட் செய்கிறார்கள். இதுகுறித்து CRPF DIG மோசஸ் தினகரன் கூறுகையில், “குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக பெண் வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த அணியை கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கினோம்.

இந்த அணியில் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உள்ளார்கள். ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் இப்பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னதாக இந்தப் பெண்கள் அணியினர் கடந்த ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சர்தார் படேல் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று சாகசம் நிகழ்த்தியினர்.


ஆசியாவிலேயே முதல் பெண்கள் CRPF அணி கடந்த 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்று 6 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் நிறைந்த படையாக CRPF உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் முதன்முறையாக அணிவகுப்பில் பங்கேற்றனர்.

மேலும் பார்க்க: 5ஜி ஸ்மார்ட்போனே இன்னும் வரவில்லை... அதற்குள் 5ஜி உடனான BMW iNext எஸ்யூவி கார் அறிமுகம்!
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading