ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

அடுத்த மாதம் TVS மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ள புதிய பைக் எது.! Zeppelin R, Ronin அல்லது Retron..?

அடுத்த மாதம் TVS மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ள புதிய பைக் எது.! Zeppelin R, Ronin அல்லது Retron..?

டிவிஎஸ்

டிவிஎஸ்

TVS motors | தீவிர தொற்றுக்கு பிறகான தற்போதைய காலகட்டத்தில் குறிப்பாக 2022-ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்தே ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் வாகன விற்பனை சூடு பிடித்து வருகிறது. ஒருபக்கம் புதிது புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், பெட்ரோலில் இயங்கும் டூ வீலர்களின் அறிமுகமும் குறையவில்லை.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தீவிர தொற்றுக்கு பிறகான தற்போதைய காலகட்டத்தில் குறிப்பாக 2022-ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்தே ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் வாகன விற்பனை சூடு பிடித்து வருகிறது. ஒருபக்கம் புதிது புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், பெட்ரோலில் இயங்கும் டூ வீலர்களின் அறிமுகமும் குறையவில்லை. இதனிடையே புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வரும் ஜூலை 6-ஆம் தேதி டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய டூவீலரை அறிமுகப்படுத்துவது தொடர்பான அழைப்பிதழில் அறிமுகமாக உள்ள இடத்தை பற்றிய தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர எந்த மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வருகிறது. இதனால் என்ன டூவீலரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் டிவிஎஸ் விரைவில் அறிமுகப்படுத்த போகும் புதிய டூ வீலர், கடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய TVS Zeppelin-ன் ப்ரொடக்ஷன் வெர்ஷனாக இருக்கலாம் என்று யூகங்கள் தெரிவிக்கின்றன. புதிய பைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் வரப்போவது ஒரு புதிய மோட்டார் சைக்கிள் மட்டுமல்ல, வாழ்க்கையின் புதிய வழி என்று குறிப்பிட்டுள்ளார். இவர் கூறுவதை வைத்து டிவிஎஸ் பிராண்டை பார்த்தால் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் க்ரூஸர்-ஸ்டைல் பைக் இல்லை.

வர போகும் TVS-ன் புதிய தயாரிப்பு இன்டர்நெட்டில் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால் அறிமுகமாக போவது என்ன ப்ரொடக்ஷன் வெர்ஷன் என்ற யூகங்கள் இப்போதே அதிகம் வருகின்றன. பொது காப்புரிமை பதிவுகளை (public patent records) தேடினால் அது TVS நிறுவனமானது zepplin R, Ronin மற்றும் Retron ஆகிய 3 பெயர்களையும் ட்ரேட்மார்க் செய்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று தான் விரைவில் அறிமுகமாக உள்ள மோட்டார் சைக்கிளின் ப்ரொடக்ஷன் வெர்ஷனின் பெயராக இருக்கலாம் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியீட்டிற்கு முன்னதாக கசிந்து வரும் அறிக்கைகளின் படி ஜூலை 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் டூவீலர் பெரும்பாலும் TVS Ronin-ஆக இருக்கலாம் என்பதை காட்டுகின்றன. Ronin என்பது 'wanderer' என்பதற்கான ஜப்பானிய வார்த்தை ஆகும். மேலும் இது ஒரு குரூஸர் மோட்டார் சைக்கிளுக்கு பொருத்தமான பெயர். நிறுவனத்தால் காப்புரிமை பெறப்பட்டதில் தற்போது கடைசிப் பெயராக இருந்தாலும் Retron என்ற பெயரில் புதிய டூ வீலர் வெளியாக வாய்ப்புகள் குறைவே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see... Renault: இந்த மூன்று மாடல்களுக்கு தள்ளுபடியை அள்ளிவீசும் ரெனால்ட்

எவ்வாறாயினும் TVS-ன் புதிய தயாரிப்பின் பெயரை தெரிந்து கொள்ள ஜூலை 6-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். புதிய பைக்கைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், டிவிஎஸ் க்ரூஸர் இந்தியாவில் முதன்முறையாக பெல்ட் ஃபைனல் டிரைவ் கொண்ட மைல்ட்-ஹைப்ரிட் எஞ்சினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் புதிய 225 சிசி மோட்டார் மூலம் இயக்கப்படும் என்றும் சுமார் 20bhp மற்றும் 19Nm டார்க்கை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: TVS