குப்பைக்குப் போகும் புத்தம்புது கார்கள்..? ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே!

BS-IV ரக கார் என்பதால் தயாரித்து விற்க முடியாமல் பல கார் நிறுவனங்களும் என்ன செய்வது எனத் தெரியாமல் வைத்துள்ளனர்.

குப்பைக்குப் போகும் புத்தம்புது கார்கள்..? ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே!
BS-IV ரக கார் என்பதால் தயாரித்து விற்க முடியாமல் பல கார் நிறுவனங்களும் என்ன செய்வது எனத் தெரியாமல் வைத்துள்ளனர்.
  • Share this:
வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே வாங்க, விற்க இந்தியாவில் அனுமதி என்பதால் புத்தம்புது BS-IV கார் மாடல்கள் தற்போது குப்பைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன மாசுக் கட்டுப்பாடு சட்டமான BS-VI ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் அமலாகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-IV ரக கார்களை யாரும் வாங்கவோ, விற்கவோ முடியாது. இதனால் வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.

BS-IV ரக கார் என்பதால் தயாரித்து விற்க முடியாமல் பல கார்களை பல கார் நிறுவனங்களும் என்ன செய்வது எனத் தெரியாமல் வைத்துள்ளனர். பல அதிரடி சலுகைகளை அறிவித்தபோதும் இந்தக் கார்களுக்கு வரவேற்பு இல்லை. கார் வைத்திருக்கும் பொதுமக்களும் இனி BS-IV கார்களை இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர விற்க இயலாது.


மாசுக்கட்டுப்பாடை வலியுறுத்தி இந்திய அரசு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு புதிய நடைமுறையை வாகனப் பயன்பாட்டில் நடைமுறைப்படுத்த உள்ளது. BS-VI ரக கார்கள் சுற்றுச்சூழலுக்கு BS-IV ரக கார்களைவிட மிகவும் உகந்தது.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




மேலும் பார்க்க: புத்தம்புதுப் பொலிவுடன் எஸ்யூவி மாடல்களுக்குப் போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகம்!
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading