Home /News /automobile /

நிதின் கட்கரியின் புதிய கார், இந்தியர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

நிதின் கட்கரியின் புதிய கார், இந்தியர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

TOYOTA MIRAI |  இந்தியாவில் தற்போது ஒரு கிலோ கிரீன் ஹைட்ரஜனின் விலை சுமார் 500 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

TOYOTA MIRAI | இந்தியாவில் தற்போது ஒரு கிலோ கிரீன் ஹைட்ரஜனின் விலை சுமார் 500 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

TOYOTA MIRAI | இந்தியாவில் தற்போது ஒரு கிலோ கிரீன் ஹைட்ரஜனின் விலை சுமார் 500 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்றத்திற்கு, தன்னுடைய புதிய காரில் வந்தது இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த காரின் சிறப்புகள் என்ன? நிதின் கட்கரியின் இந்த கார் பயணம் உணர்த்தும் செய்தி என்ன?

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 105 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாலும், சாதாரணமாக ஒரு காரில் அதிகபட்சம் 20 கிலோமிட்டர் வரை பயணம் செய்யலாம். அப்படி பார்த்தால், ஒரு கிலோமீட்டர் பயணம் செய்ய கிட்டதிட்ட 5 முதல் 6 ரூபாய் வரை ஆகும். ஆனால், ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்ய அதிகபட்சம் 2 ரூபாய் மட்டுமே ஆகும் என்ற வகையிலும் கார்கள் வர தொடங்கிவிட்டன. அப்படிப்பட்ட ஒரு காரில் தான் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார்.

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பயணிக்கும் இந்த காரின் பெயர் டொயோட்டா மிராய் (TOYOTA MIRAI), இந்த கார் ஹைட்ரஜன் Fuel Cellல் இயங்க கூடியது. எப்படி, கேஸ் பயன்படுத்தி ஒரு கார் இயங்குகிறதோ, அதே போல், இந்த வகை கார்களில் உள்ள டேங்கில் கிரீன் ஹைட்ரஜன் (GREEN HYDROGEN ) நிரப்பப்படும். இந்த கிரீன் ஹைட்ரஜன், அந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ள பேட்டரி மூலம் மின்சாரமாக மாற்றப்பட்டு, காரின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த காரில் இருந்து வருவது புகை அல்ல ,மாறாக, வாகனம் இயங்கும் போது இந்த காரில் இருந்து வெளியேறுவது சூடான காற்றும், நீர் ஆவியும் தான்.

இந்த காரின் பேட்டரிக்கு தேவையான சக்தி என்பது இரண்டு விதத்தில் கிடைக்கிறது. ஒன்று, டேங்கில் உள்ள ஹைட்ரஜன் மூலம் கிடைப்பது. மற்றொன்று, இந்த கார் பயணத்தில் இருக்கும் போது, அதன் வேகத்தை குறைக்க பிரேக் பிடித்தால், அதில் உண்டாகும் சக்தி பேட்டரியில் மின்சாரமாக சேமிக்கப்படுகிறது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்து, அங்கு பயன்பாட்டில் உள்ளது.



இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை அமெரிக்காவில் 50 லட்சம் ரூபாய். இந்தியாவிற்கு, இந்த மிராய் கார், உதிரி பாகங்களாக கொண்டு வந்து, இங்கு காராக மாற்றப்படுவதற்கு பதிலாக, முழுமையாக தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு உகந்த வகையில் இறக்குமதி செய்யப்படும். அவ்வாறு வரும் போது, இந்தியாவில் இறக்குமதி வரி மட்டும் காரில் விலை 100 சதவிதம் வரை விதிக்கப்படலாம். எனவே காரின் விலையோடு சேர்த்து, இறக்குமதி வரி, கூடுதல் வரி என குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாயை இந்த கார் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில், ஒரு முறை கிரீன் ஹைட்ரோஜன் டேங்க் புல் செய்தால் 600 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.

2021ம் ஆண்டு சுதந்திர தின உரையில், தேசிய ஹைட்ரஜன் மிஷன் (National Hydrogen Mission) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதாவது, இந்தியாவை கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய நாடாக உருவாக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

இந்தியாவில் தற்போது ஒரு கிலோ கிரீன் ஹைட்ரஜனின் விலை சுமார் 500 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. ஆனால், இதன் விலையை, ஒரு கிலோ 160 ரூபாய் என்ற நிலைக்கு கொண்டு வரும் போது, இந்தியாவில், ஹைட்ரஜன் வாகனங்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ஏற்கனவே கூறியிருக்கிறார்.



5 பேர் வரை பயணம் செய்ய முடியும் வகையில் உள்ள இந்த காரை, கர்நாடகாவில் உள்ள டொயோட்டா ஆலையில் தயாரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேட்டரி வாகனங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. இந்நிலையில், பேட்டரி வாகனங்கள் மற்றும் அல்ல, கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்க உதவும் வகையிலும், சுற்றுசூழலை மாசுபடுத்தாத வகையிலும் உள்ள எந்த வகை எரிபொருளையும் பயன்படுத்த இந்தியா தயாராக இருப்பதை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த டொயோட்டா மிராய் பயணம் காட்டுகிறது.

தொழில் ரீதியில், டொயோட்டா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக புதிதாக எந்த காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்யாமல், மாருதி சுசுகி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்நிறுவன காரின் பேரை மட்டும் மாற்றி, டொயோட்டா என்ற பெயரில் அறிமுகம் செய்து வருகிறது. இது, எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனத்திற்கான தேவை மிகப்பெரிய அளவில் குறைந்து, சாமானிய மக்களின் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்பதை சொல்லாமல் சொல்லும் செய்தியாகவே உள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Nitin Gadkari

அடுத்த செய்தி