ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

கிக்-ஸ்டார்ட் காரை உருவாக்கிய கிராமத்து மனிதருக்கு புதிய Bolero காரை பரிசளிக்க போகும் ஆனந்த் மஹிந்திரா!

கிக்-ஸ்டார்ட் காரை உருவாக்கிய கிராமத்து மனிதருக்கு புதிய Bolero காரை பரிசளிக்க போகும் ஆனந்த் மஹிந்திரா!

தனது இந்த வாகனம் பழைய மற்றும் கைவிடப்பட்ட கார் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று லோஹர் கூறி இருக்கிறார்.

தனது இந்த வாகனம் பழைய மற்றும் கைவிடப்பட்ட கார் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று லோஹர் கூறி இருக்கிறார்.

தனது இந்த வாகனம் பழைய மற்றும் கைவிடப்பட்ட கார் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று லோஹர் கூறி இருக்கிறார்.

  • 2 minute read
  • Last Updated :

மஹிந்திரா குரூப் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஒருவரின் சாதனை அல்லது கடின உழைப்பை பாராட்டுவதில் மற்றும் அங்கீகரிப்பதில் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர். தன்னை ஈர்த்த பல நபர்களை கவரவிக்கும் வகையில் ஆனந்த் மஹிந்திரா, தனது மஹிந்திரா நிறுவன கார்களை வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார். இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ளவர் மகாராஷ்டிராவின் தேவராஷ்டிரே கிராமத்தைச் சேர்ந்த தத்தாத்ரயா லோஹர் என்ற நபர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தத்தாத்ரயா லோஹர் பழைய உலோக பொருட்களை (scrap metal) பயன்படுத்தி ஒரு 4 சக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். அவரின் இந்த தனித்துவமான படைப்பு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. ஹிஸ்டோரிகானோ என்ற யூடியூப் சேனல் கூறி இருக்கும் தகவலின்படி, பெரிதாக கல்வியறிவு இல்லாத தத்தாத்ராய லோஹர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார்.

பார்ப்பதற்கு மஹிந்திராவின் ஜீப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கார், எந்த மோட்டார் வாகன விதிமுறைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்ற போதும் இந்த புதுமையான படைப்பு ஆனந்த் மஹிந்திராவைக் கவர்ந்தது. இதனை தொடர்ந்து இது தொடர்பான வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் வீடியோவை ஷேர் செய்து உள்ளார். நம் மக்களின் புத்தி கூர்மை மற்றும் அற்புத திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

Also read... ரூ.70,000 பட்ஜெட்டிற்கு கீழ் இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்!

தத்தாத்ராய லோஹரின் வாகனம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் 45-வினாடி வீடியோவையும் ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்து இருக்கிறார். லோஹரின் 4 சக்கர வாகனம் வெறும் ரூ.60,000 முதலீட்டில் தயாரிக்கப்பட்டது மற்றும் பொதுவாக இரு சக்கர வாகனங்களில் காணப்படும் கிக்-ஸ்டார்ட் மெக்கானிஸத்தை உள்ளடக்கியது. லோஹரின் இந்த கார் ஒரு சிறிய ஜீப்பை போல் குறைந்த பட்ச செயல்பாடுகளை கொண்டுள்ளது. லோஹர் இந்த வாகனத்தை பயணிகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்துகிறார்.

தனது இந்த வாகனம் பழைய மற்றும் கைவிடப்பட்ட கார் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று லோஹர் கூறி இருக்கிறார். இதனிடையே லோஹரின்  திட்டத்தால் ஈர்க்கப்பட் ஆனந்த் மகிந்திரா, அந்த காருக்கு மாற்றாக புதிய மஹிந்திரா பொலேரோ வாகனத்தை லோஹருக்கு வழங்குவதாக கூறி உள்ளார்.

Also read... 2022-ல் அறிமுகமாக உள்ள சிறந்த ப்ரீமியம் பைக்குகளின் லிஸ்ட் இதோ!

எனினும் 5 பேர் வரை பயணிக்க கூடிய லோஹரின் "கிக்-ஸ்டார்ட் கார்" சாலை விதிமுறைகளுக்கு இணங்காததால், உள்ளூர் அதிகாரிகள் அதை சாலைகளில் இயக்கப்படுவதை நிறுத்துவார்கள் என்றும், எனவே தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் ஒரு பொலேரோவை வழங்குவேன் என்றும் ஆனந்த் மஹிந்திரா கூறினார். 11,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் மற்றும் எண்ணற்ற கமெண்ட்ஸ்களை குவித்துள்ள மஹிந்திராவின் ட்வீட் மூலம் தத்தாத்ராய லோஹருக்கும் அவரது படைப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

First published: