• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பதிலாக எந்த பைக்குகள் வாங்கலாம்!

பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பதிலாக எந்த பைக்குகள் வாங்கலாம்!

பஜாஜ் பல்சர் F250 vs பல்சர் 220F

பஜாஜ் பல்சர் F250 vs பல்சர் 220F

யமஹா நிறுவனத்தின் ‘எம்டி 15’ பஜாஜ் பல்சருக்கு மாற்றான பைக் ஆகும். ரூ.1.45 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதில் உள்ள ஆறு ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட சில உயர் அம்சங்களின் காரணமாக, இது பிரீமியத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
எப்பொழுதும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான பைக்குகளில் பல்சர் பைக்கும் ஒன்று. சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் ‘பல்சர் 250’ (Pulsar 250 ) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய மாடலாக இருக்கிறது. இதில் இரண்டு வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை எப் 250 மற்றும் என் 250 ஆகும். இந்த பல்சர் 250 யமஹா எப்.இஸட் 250 மற்றும் சுஸுகி ஜிக்ஸர் 250 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இது இருக்கும் வகையில் தயாரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பைக் கவர்ச்சிகரமாகவும், பல்வேறு புதிய அம்சங்களுடனும் வருகிறது. புதிய என்ஜின் கவுல், பின்னிருக்கை பயணிகளுக்கான கால் வைக்கும் பகுதி, வலதுபுற கிளிப் ஆன் ஹேன்டில் பார் ஆகியவை ஸ்போர்டியான பைக் தோற்றத்தை அளிக்கிறது. வலதுபுறம் மேலெழுந்த கிளிப் ஆன் ஹேண்டில்பார் மிகச் சிறப்பான ஓட்டும் அனுபவத்தை அளிக்கிறது. பக்கவாட்டுப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸாஸ்ட், அலாய் சக்கரம் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது.

இவை சிவப்பு, கிரே, வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 1 சிலிண்டர், 2 வால்வு கொண்ட 249 சி.சி. திறனை வெளிப்படுத்தும் என்ஜினைக் கொண்டது. இது 24.5 பி.எஸ். திறனை, 8,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வசதி உள்ளது.இதன் முந்தைய விலை ரூ.1.38 லட்சம் ஆகும். தற்போதைய அறிமுக விலையாக ரூ.1.40 லட்சம் மதிப்பில் வருகிறது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 250 விலையில் விற்கக்கூடிய மற்ற பைக்குகளை இங்கு பார்க்கலாம்.,

யமஹா எம்டி15 (Yamaha MT15) :

யமஹா நிறுவனத்தின் ‘எம்டி 15’ பஜாஜ் பல்சருக்கு மாற்றான பைக் ஆகும். ரூ.1.45 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதில் உள்ள ஆறு ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட சில உயர் அம்சங்களின் காரணமாக, இது பிரீமியத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யமஹாவின் பிரபலமான YZF-R15 மோட்டார்சைக்கிளில் உள்ள அதே 150 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினையே இதிலும் பொருத்தி இருக்கிறார்கள். இது 10,000 ஆர்பிஎம்மில் (RPM) 18.2 பிஎச்பி ஆற்றலை வழங்குகிறது.

Also read... சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழு விலக்கு - ஒடிசா அறிவிப்பு!

ஹோண்டா CB200X (Honda CB200X) :

ஹோண்டா நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘CB200X’ பைக்கை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.1.44 லட்சம் ஆகும். ஏற்கனவே வந்த ‘ஹார்னெட் 2.0’ மாடலின் மறு எடிசனாக உருவாக்கி இருக்கிறார்கள். அதே என்ஜின்,பிளாட்பார்ம், சஸ்பென்ஷன் என வந்திருக்கிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) :

பஜாஜ் நிறுவனத்தின் 250 பல்சருக்கு இணையாக பல்சர் என்.எஸ் 200 இருக்கிறது. மிகவும் ஸ்போர்ட்டியான பல்சர்களில் என்.எஸும் ஒன்றாக இருக்கிறது. இது ரூ.1.33 லட்சம் விலைக்கு கிடைக்கிறது.

பஜாஜ் பல்சர் 220 எஃப் (Bajaj Pulsar 220F) :

பஜாஜ் பல்சர் என்.எஸ் 200வை போலவே ‘பல்சர் 220 எஃப்’ மாடலும் நல்ல சாய்ஸ் ஆகும். இதன் விலை ரூ.1.34 லட்சம் ஆகும். இங்கு பட்டியலிட்ட எல்லா வாகனங்களும் சிறந்த, தரமான சாய்ஸ் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: