இரு சக்கர வாகன உற்பத்தியாளரான யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 Yamaha MT-15 வெர்ஷன் 2.0-ஐ இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.1.60 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக்கில் இப்போது அப்சைட்-டவுன் ஃபரன்ட் ஃபோர்க்ஸ், அப்டேட்டட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்படிருந்தாலும், ரூ.1.60 லட்சம் என்ற விலை சிலருக்கு அதிகமாக தோன்றலாம். இதே விலை பிரிவில் மற்றும் 2 லட்சத்திற்குள் இந்தியாவில் கிடைக்க கூடிய சில சிறந்த பைக்குகளை பார்க்கலாம்.
பஜாஜ் டோமினார் 250 (Bajaj Dominar 250):
இந்த பைக்கின் விலை ரூ.1.64 லட்சமாக உள்ளது. MT 15 பைக்கை விட கூடுதலாக ரூ.4000 செலுத்தினால், ஏறக்குறைய யமஹாவின் தயாரிப்பை போலவே ஸ்டைலிங் மட்டும் பார்ட்ஸ்களை கொண்டது டோமினார். பஜாஜ் டோமினார் 250 பைக்கானது முழு-LED லைட்டிங் சிஸ்டம், முழு-டிஜிட்டல் கன்சோல் மற்றும் 26.63bhp மற்றும் 23.5Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 248cc, லிக்விட்-கூல்டு எஞ்சின் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.
பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 (Bajaj Pulsar RS 200):
பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கின் விலையும் கிட்டத்தட்ட ரூ.1.64 லட்சத்திற்கு நெருக்கமாக தான் இருக்கிறது. Dominar 250 பைக்கின் அதே விலையில், ஸ்போர்ட்டியர் ரைடிங் அனுபவத்தை விரும்பும் நபர் நீங்கள் என்றால் தாராளமாக பல்சர் RS 200 பைக்கை தேர்வு செய்யலாம். பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கானது 24.2bhp பவர் மற்றும் 18.7Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் 199.5சிசி, லிக்விட்-கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
கேடிஎம் 125 டியூக் (KTM 125 Duke):
இந்த பைக்கின் விலை ரூ 1.71 லட்சம். மேலே பார்த்த பைக்குகளை விட அதிக பிரீமியம் ஆனால் சிறிய பைக்காக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் KTM 125 Duke-ஐ பரிசீலிக்கலாம். பெரிய டியூக் பைக்கில் இருப்பது போலவே ஸ்பிலிட் டிரெல்லிஸ் ஃப்ரேம், அப்சைட்-டவுன் ஃபோர்க்ஸ் மற்றும் அலுமினிய ஸ்விங்கார்ம் போன்ற பல பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் டிசைனும் கூட 200 Duke மற்றும் 250 Duke பைக்குகளை ஒத்ததாக உள்ளது.
சுசுகி ஜிக்ஸர் 250 (Suzuki Gixxer 250):
இந்த பைக்கின் விலை ரூ.1.80 லட்சம் ஆகும். இது 155cc Gixxer போல தோற்றமளித்தாலும், 26.13bhp பவர் மற்றும் 22.2Nm டார்க்கை உற்பத்தி செய்யும் மற்றும் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட மிகவும் மென்மையான 249cc, ஆயில்-கூல்டு எஞ்சினை கொண்டுள்ளது. மேலும் இந்த பைக் அம்சங்களின் அடிப்படையில் மிகவும் அடிப்படையான் ஒன்று.
ஜாவா ஸ்டாண்டர்ட் (Jawa Standard):
ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கின் விலை ரூ.1.78 முதல் ரூ.1.93 லட்சம் வரையாக உள்ளது. நவீன-ரெட்ரோ என்பதற்கான உண்மையான அர்த்தமாக பளபளக்கும் க்ரோம், ரவுண்டட்ட் பாடி பேனல்ஸ் மற்றும் ஸ்போக் வீல்களுடன் காட்சியளிக்கிறது ஜாவா ஸ்டாண்டர்ட். இந்த பைக்கின் 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் கூடிய 293 cc எஞ்சின் 27bhp பவர் மற்றும் 27.05Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jawa Bikes