உலக அளவிலான பணவீக்கப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வின் வலிகளை இந்தியர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கும் மேலாக இருந்து வருகிறது. இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடுகையில் மின்சாரத்தில் விலை குறைவு தான். மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகைகள் மூலமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக மாறி வருகிறது.
குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மூலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒருசில நிறுவனங்களே உள்ள நிலையில், அதன் பயன்பாடு குறைவாகத்தான் இருக்கிறது.
ஹூண்டாய், எம்ஜி போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்கின்றன என்றாலும் கூட, பெட்ரோல், டீசல் வாகனங்களை உற்பத்தி செய்வதில் தான் அந்த நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
மிக பிரத்யேகமான எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் கவனம் செலுத்தும் டெஸ்லா போன்றதொரு நிறுவனம் இந்தியாவில் இல்லை என்பதும் ஒரு குறையாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் முயற்சித்து வரும் நிலையில், இங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : நாட்டின் அதிவேக EV சார்ஜரை அறிமுகப்படுத்தி உள்ள Kia நிறுவனம்
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வரும் நிலையில், இனி வரக் கூடிய காலங்களில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் எனத் தெரிகிறது. அதேபோன்று, சாலைகளில் பாரம்பரியமாக இயங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலெக்ட்ரிக் வாகனங்களை பெரும்பாலும் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் தான் அதிகம் வாங்குகின்றனர். ஏனென்றால் அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு சொசைட்டிகள் போன்ற இடங்களில் மட்டுமே சார்ஜிங் நிலையங்கள் இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் சார்ஜிங் நிலையங்கள் இல்லை என்பதால் வெளியூர் பயணங்களுக்கு எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
Also Read : கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!
எனினும், முதலீட்டாளர்கள், அரசு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒருசேர சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.