உலகளாவிய ட்ரெண்டை பின்பற்றி இந்தியாவும் தற்போது புதைபடிவ எரிபொருட்களிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு பதில் நிலையான வழிகளை பின்பற்றுவதற்கான மாற்றத்தை முன்னெடுத்து உள்ளது.
மின்சாரம் (எலெக்ட்ரிக்) மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டு முக்கிய மாற்றுகளை மையமாக வைத்து இந்த மாற்றம் பற்றிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு காரணமாக பல மாதங்களாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. உலகளாவிய கார்பன்-நடுநிலை இலக்குகளுடன் நெருக்கமான் தொடர்புடையது என்றாலும், ஹைட்ரஜன் எரிபொருள் (Hydrogen fuel) குறித்த பல குழப்பங்கள் இன்னும் நீடிக்கிறது.
ஹைட்ரஜன் ஃபியூயல் செல்ஸ்(hydrogen fuel cells) பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான திறன் கொண்டவை என்பது பற்றிய பார்வைகளை இங்கே பார்க்கலாம்..
எங்கும் கிடைக்கும்..
ஹைட்ரஜன் நமது பூமியில் மிக எளிதாக கிடைக்கும் தனிமமாக உள்ளது மற்றும் புதுப்பிக்கத்தக்கது. ஹைட்ரஜன் என்பது zero-carbon எதிர்காலத்தை உண்மையாக்க உலகிற்கு உதவும் ஆற்றலின் சரியான ஆதாரம் ஆகும்.ஹைட்ரஜன் ஃபியூயல் செல்ஸ் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை ஒருங்கிணைத்து மின் ஆற்றலையும் நீரையும் உற்பத்தி செய்யும் ஒரு மின் வேதியியல் செயல்முறையில் வேலை செய்கிறது.
அதிக ஆற்றல் மற்றும் ஆற்றல் திறன் கொண்டது:
புதைபடிவ எரிபொருட்களை விட ஹைட்ரஜன் ஃபியூயல் செல்ஸ் டெக்னலாஜி நல்ல ஆற்றல் திறன் மற்றும் அதிக அடர்த்தி கொண்ட ஆற்றல் மூலத்தை வழங்குகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் டீசலை விட மூன்று மடங்கு ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, டீசலின் கிராவிமெட்ரிக் ஆற்றல் அடர்த்தி 45MJ/kg ஆகும், அதேசமயம் இயற்கை எரிவாயுக்கான கிராவிமெட்ரிக் ஆற்றல் அடர்த்தி 55MJ/kg ஆகும்.
Also Read : இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லை.. ஏன் தெரியுமா?
சிறப்பான மாற்று:
பசுமை எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் ஆற்றல் உற்பத்தியின் துணை தயாரிப்புகளைக் கையாளுதல் உள்ளிட்டவை முக்கியமானவையாக உள்ளன. அந்த வகையில் ஹைட்ரஜன் உற்பத்தியின் துணை தயாரிப்புகள் வெப்பமும் தண்ணீரும் மட்டுமே என்பதால் ஹைட்ரஜன் சிறந்த மாற்றுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
Also Read : ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த நிசான் நிறுவனம்..
விநியோகம்:
தற்போது பெரும்பாலான உலகநாடுகள் எரிசக்தி தொடர்பான தேவைகளை நிறைவேற்ற பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் கீழ் உள்ள நாடுகளையே சார்ந்துள்ளது. இருப்பினும் ஹைட்ரஜன் ஃபியூயல் செல்ஸ் ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் மூலமாக மாறினால் ஒரு நாட்டின் சார்புநிலையைக் குறைக்கும் ஆற்றலை தரும். மேலும் இது உலகம் முழுவதும் ஆற்றல் மற்றும் மின் விநியோகங்களை ஜனநாயகப்படுத்த உதவும்.
Also Read : இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எலக்ட்ரிக் கார் எது தெரியுமா.?
பன்முகத்தன்மை:
டெக்னலாஜி வளரும் போது ஹைட்ரஜன் ஃபியூயல் செல்ஸ் பெரிய அல்லது சிறிய பிற தயாரிப்புகளுக்கு திறமையான ஆற்றல் வழங்கும் மூலமாக மாற முடியும். அதாவது வீட்டு உபயோகப் பொருட்கள், ஹீட்டிங் சிஸ்டம்ஸ், உற்பத்தி இயந்திரங்கள் (manufacturing machines) போன்றவற்றுக்கு ஆற்றல் வழங்க கூடும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.