ரூ.20 லட்சம் செலவில் லாரியில் அமைக்கப்பட்ட மூவிங் ரெஸ்டாரண்ட் - மக்கள் வரவேற்பு!

உணவக லாரி

லாரியின் முதல் தளத்தில் தேவையான அனைத்து உபகரணங்களுடனும் கூடிய கிச்சன் உள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் இடம் கிச்சனுக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கடந்த ஒன்றரை வருடமாக உலக பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது கோவிட்-19 பெருந்தொற்று. முதல் அலையில் துவங்கி இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கொரோனாவின் கோர கரங்கள் பல மாதங்களாக நீண்டு கொண்டே செல்வதால் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். பலர் தாங்கள் பல வருடங்களாக அனுபவம் பெற்று செய்து வந்த வேலைகளை விட்டு விலகி, வேறு வேறு தொழில்கள் அல்லது வேலைகளில் ஈடுபட்டு சொற்ப வருவாயில் குடும்ப செலவுகளை கவனித்து வருகின்றனர்.

தொற்று பரவலால் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக மீண்டும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் துவங்கியது முதலே ஹோட்டல் வியாபாரத்தை உள்ளடக்கிய சுற்றுலாத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மூலம் பொருளாதாரத்தில் செழிப்பாக இருந்து வந்த மாநிலங்கள் அல்லது பகுதிகள் மிக கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளன.  சுற்றுலா தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த மக்களும் தொற்றின் தாக்கம் மற்றும் உலகளாவிய லாக்டவுன் காரணமாக வேலைகளை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டிருந்த பலர் வேலைகளை இழந்து தாயகம் திரும்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் (East Burdwan ) வசித்து வருகிறார் பெர்த் மண்டல்(Perth Mandal). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டம் பெற்ற பின் துபாயில் பணிபுரிந்து வந்தார். முன்னதாக பல 5 ஸ்டார் ஹோட்டல்களில் பணிபுரிந்தார். இருப்பினும் உலகை அச்சுறுத்தி வரும் தொற்று நோய் பெர்த் மண்டலை தாயகம் திரும்பும் கட்டாயத்திற்கு உள்ளாக்கியது. இவர் சொந்த ஊர் வந்த பிறகு பரவிய இரண்டாம் அலையால் ஏராளமான கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் விதிக்கப்பட்டதால், கடினமான நாட்கள் தன் முன் இருப்பதை உணர்ந்தார்.

Also Read:   கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!

தொற்று நோய்க்கு மத்தியில் வாழ்க்கையை நடத்த சில வணிக யோசனைகளை செயல்படுத்த முடிவு செய்தார். இதன்படி 4 சக்கர லாரியில் ஒரு நகரும் உணவகத்தை (moving restaurant) உருவாக்க திட்டமிட்டார் .தனது இந்த ஐடியா பற்றி கூறிய பெர்த், ஒரு ரெஸ்டாரண்ட் செட் செய்யும் அளவிற்கு சாலை ஓரத்தில் எனக்கு சொந்த இடம் என்று எதுவும் இல்லாததால், மூவிங் ரெஸ்டாரண்டை உருவாக்கும் யோசனை ஏற்பட்டதாக கூறினார்.

இதற்காக ரூ.20 லட்சம் செலவில் லாரி ஒன்றில் மூவிங் ரெஸ்டாரண்ட் உருவாக்கி உள்ளார். தனது இந்த மூவிங் ரெஸ்டாரண்ட் மூலம் மக்களுக்கு இந்தோ - கான்டினென்டல் உணவு வகைகளை வழங்குவதாக கூறினார். மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இந்த மூவிங் ரெஸ்டாரண்ட் பயணிக்கிறது. லாரியின் முதல் தளத்தில் தேவையான அனைத்து உபகரணங்களுடனும் கூடிய கிச்சன் உள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் இடம் கிச்சனுக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது.

பெரிய குடைகளின் கீழ் அழகான மேசைகள் மற்றும் நாற்காலிகளால் சீட்டிங் ஏரியா அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரே நேரத்தில் இந்த மூவிங் ரெஸ்டாரண்டில் 50 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம் என்று கூறுகிறார் பெர்த் மண்டல். லோ பட்ஜெட் கெட் டுகெதர் நிகழ்வுகளுக்கு தங்கள் வீடு செட் ஆகாது, சிறியதாக இருக்கும் என்று நினைப்போர் தம்மை அணுகலாம் என்றும் எனது நீல நிற மூவிங் ரெஸ்டாரண்டுடன் சரியான நேரத்தில் வருவேன் என்றும் பெர்த் கூறி உள்ளார்.

Also Read:  3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்மாதிரியாக திகழும் டெல்லி மருத்துவமனைகள்!

சுகாதாரத்தை பராமரிக்க நுழைவாயிலில் ஒரு வாஷ் பேசினையும் இவர் அமைத்துள்ளார். இந்த தொற்று பேரிடர் நேரத்தில் உணவகங்கள் அல்லது பார்களில் மூடிய இடங்களில் சாப்பிடுவதை விட பாதுகாப்பானது என்பதால் பெர்த் மண்டலின் இந்த மூவிங் ரெஸ்டாரண்ட் பலரை ஈர்த்துள்ளது.
Published by:Arun
First published: