Home /News /automobile /

சீட் பெல்ட் அணியாவிட்டால் கார்களில் உள்ள ஏர்பேக் மூலமாக எந்த பலனும் கிடைக்காது - காரணம் ஏன்?

சீட் பெல்ட் அணியாவிட்டால் கார்களில் உள்ள ஏர்பேக் மூலமாக எந்த பலனும் கிடைக்காது - காரணம் ஏன்?

 காரில் சீட் பெல்ட் அணிந்து செய்வது முக்கியமானது

காரில் சீட் பெல்ட் அணிந்து செய்வது முக்கியமானது

Importance of Seat belt : காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஏர்பேக் மூலமாக எந்தப் பலனும் கிடைக்காது என்று கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கார்கள் என்ன விலை கொண்டதாக இருந்தாலும், அவற்றில் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஏர்பேக் மூலமாக எந்தப் பலனும் கிடைக்காது என்று கூறுகின்றனர்.

சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் இணைந்து வேலை செய்யும் :

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகிய இரண்டும் இணைந்து வேலை செய்யக் கூடியதாகும். இந்த இரண்டில் ஒன்றில்லாமல் மற்றொன்றை மட்டும் வைத்துக் கொண்டால் போதுமான பாதுகாப்பு கிடைக்காது. விபத்து ஏற்படும் பட்சத்தில் ஒரு நபர் தூக்கி எறியப்படாமல் தடுக்கவும், அமர்ந்த நிலையில் அப்படியே இருப்பதுடன், அவர் மீது எதுவும் மோதிவிடாமல் தடுக்கவும் இந்த இரண்டுமே முக்கியமானதாகும். குறிப்பாக, உயிரிழப்புகளைத் தடுக்க இது உதவும்.

விபத்து ஏற்படும் போது பயணியை இழுத்துப் பிடிக்க சீட் பெல்ட் உதவும். தலை மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்படாதவாறு ஏர்பேக் பாதுகாப்பு தருகிறது. சில உயர் ரக கார்களில் கால் மூட்டுகளுக்கும் ஏர்பேக் இடம்பெற்றுள்ளது. சில கார்களில் பக்கவாட்டிலும் கூட ஏர்பேக் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் காரில் இத்தகைய பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றுள்ளது.

Also Read : இந்தியாவில் வாகன விற்பனையை அதிகரிக்க ரூ.260 கோடியை முதலீடு செய்ய உள்ள ஹோண்டா நிறுவனம்.!

சீட்பெல்ட் தான் மிக முக்கியம் :

எத்தனை ஏர்பேக் இருந்தாலும், நீங்கள் சீட்பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே தூக்கி எறியப்படாமல் பாதுகாக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மிகக் கடுமையான விபத்து ஏற்படும்போது, ஏர்பேக் வெளிப்பட்டாலும் நீங்கள் சீட்பெல்ட் அணிந்திருக்கவில்லை என்றால் பெரும் இழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
Published by:Janvi
First published:

Tags: Airbags, Car accident

அடுத்த செய்தி