• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • சாலையில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - வைரலாகும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி!

சாலையில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - வைரலாகும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி!

சாலையில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சாலையில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஸ்கூட்டரின் சீட் பகுதி ஓபன் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அதற்கு அடியில் இருந்து தான் ஸ்கூட்டர் புகையை கக்குகிறது.

  • Share this:
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன சந்தை சமீப மாதங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. EV கார்கள் மற்றும் டூவீலர்கள் விற்பனையும் சூடு பிடித்து வருகிறது. பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் மக்கள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றி தெரிந்து கொள்வதிலும், வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம், மக்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.

ஹைதராபாத்தின் முக்கிய சாலை ஒன்றில் 2 நாட்களுக்கு முன்னர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த வீடியோ நாடு முழுவதும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுவரை மொபைல் டிவைஸ்கள் அல்லது பிற சாதனங்களின் சார்ஜர்கள் போன்ற எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ்கள் தீப்பிடித்து எரிவதை பற்றி நாம் ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எறிந்துள்ள சம்பவம் வாகன தொழித்துறையினரையும் அதிர்ச்சி கொள்ள செய்து இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிப்பதற்கு முன்பு புகையை கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1.51 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ கிளிப்பை @in_patrao என்ற யூஸர் ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார். சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து பெரும் வெண்புகை சிறிது சிறிதாக வெளியேற துவங்கி போக போக புகை வெளியேறும் அளவு அதிகமாகிறது.

ஸ்கூட்டரின் சீட் பகுதி ஓபன் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அதற்கு அடியில் இருந்து தான் ஸ்கூட்டர் புகையை கக்குகிறது. வெளியேறும் வெண்புகைக்கு மத்தியில் அவ்வப்போது தீ தோன்றியது. ஒரு கட்டத்தில் வெண்புகை மறைந்து முற்றிலும் தீ மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து வெளியே வருகிறது. இதனை பார்த்து அருகிலிருந்த மக்கள் சகோதரி விட்டு தள்ளி ஓடுகின்றனர்.



இதனிடையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் சில நிபுணர்கள் கூறுகையில் வாகனத்தின் பேட்டரியில் பழுது ஏற்பட்டிருந்தால் கூட இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி வெடித்தால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

Also read... தொடர்ந்து ஆறு முறையாக உலகின் மிக சிறந்த ஏர்லைன் இதுதான் - ஏன் தெரியுமா ?

மேலும் விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் யாராவது வேண்டுமென்றே ஸ்கூட்டரின் பேட்டரி யூனிட் அல்லது அந்த ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் சர்க்யூட்டை சேதப்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. காரணம் ஏதுவாக இருந்தாலும் மக்களில் பலர் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் பற்றிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: