விமான நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள்... கரடி வேடமிட்டு பணியாற்றும் ஊழியர்கள்!- வீடியோ

அகமதாபாத் விமான நிலையத்தில் லங்குர் என்னும் குரங்கு இன விலங்குகள் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள்... கரடி வேடமிட்டு பணியாற்றும் ஊழியர்கள்!- வீடியோ
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 10, 2020, 11:54 AM IST
  • Share this:
விமான நிலையங்களில் விமானம் கிளம்பும்போதும் இறங்கும் போதும் விலங்குகள் மற்றும் பறவைகளால் அபாயம் ஏற்படும் சூழல் உலகெங்கிலும் நிலவும் ஒரு பிரச்னையாகும்.

இதை சமாளிக்க அகமதாபாத் விமான நிலைய ஊழியர்கள் எடுத்துள்ள முயற்சி பெரும் வைரலாகி வருகிறது. குஜராத்தைச் சுற்றியுள்ள விமான நிலையங்களில் காட்டு விலங்குகளால் அதிகப்படியான அபாயங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அகமதாபாத் விமான நிலையத்தில் லங்குர் என்னும் குரங்கு இன விலங்குகள் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் விமானங்களுக்கு ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்கவும் விமான நிலைய ஊழியர்கள் புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர். கரடி போன்று மாறுவேட உடை அணிந்து விமான நிலைய ஊழியர்கள் ஓடுதளங்களைச் சுற்றி ஓடி வருகின்றனர்.
இதைக் கண்டு குரங்குகள் பயந்து ஓட இப்படியாக விரட்டுவதை தினமும் வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அகமதாபாத் விமான நிலைய ஊழியர்கள்.

மேலும் பார்க்க: Oscars 2020 | ஒபாமா தம்பதியர் தயாரித்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது..!
First published: February 10, 2020, 11:54 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading