FASTags அறிமுகத்துக்குப் பின் டோல் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது- ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

இதுவரையில் 1.4 கோடி FASTags வழங்கியுள்ளோம். இன்னும் கூடுதலாக 1 கோடி FASTags வழங்கவும் தயாராகி உள்ளோம்.

FASTags அறிமுகத்துக்குப் பின் டோல் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது- ஒப்புக்கொண்ட மத்திய அரசு!
fastag
  • News18
  • Last Updated: February 4, 2020, 4:29 PM IST
  • Share this:
இந்தியா முழுவதும் FASTags பயன்பாடு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் டோல் கேட்களில் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது என்பதை நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

டோல் ப்ளாசாக்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் FASTags அறிமுகத்துக்கு முன்னர் இருந்ததைவிட 29 சதவிகித அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலங்களவையில் இதுகுறித்து சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்தார்.

நிதின் கட்காரி கூறுகையில், “நாடு முழுவதும் தற்போது டோல் ப்ளாசாக்களில் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது உண்மைதான். FASTags அல்லாமல் இன்னும் பல இடங்களில் ரொக்கமும் ஏற்றுக்கொள்ளப்படும் சூழல் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இதுவரையில் 1.4 கோடி FASTags வழங்கியுள்ளோம்.


இன்னும் கூடுதலாக 1 கோடி FASTags வழங்கவும் தயாராகி உள்ளோம். விரைவில் காத்திருப்பு நேரம் குறையும்” என்றார்.

மேலும் பார்க்க: இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 பட்ஜெட் கார்கள்..!
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்