Home /News /automobile /

வேகனார் முதல் ஸ்விஃப்ட் வரை - மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் அதிரடி தள்ளுபடிகள்

வேகனார் முதல் ஸ்விஃப்ட் வரை - மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் அதிரடி தள்ளுபடிகள்

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

எளிய மக்களிடம் அதிக வரவேற்பை பெறும் மாருதி சுஸுகி நிறுவன கார்களுக்கும் டிஸ்கவுண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டு நிறைவடைய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை போட்டி, போட்டுக் கொண்டு அறிவித்து வருகின்றன. டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் உள்ளிட்ட பல கார் நிறுவனங்கள் இந்த மாதத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்கவுண்ட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், எளிய மக்களிடம் அதிக வரவேற்பை பெறும் மாருதி சுஸுகி நிறுவன கார்களுக்கும் டிஸ்கவுண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், எல்லா கார்களுக்கும் டிஸ்கவுண்ட் வழங்கப்படவில்லை. சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு மட்டுமே டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், வாடிக்கையாளர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் டிசையர் காருக்கு டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளதா என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். எனினும், சிஎன்ஜி மாடல் கொண்ட அனைத்து கார்களுக்கும் டிஸ்கவுண்ட் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேகனார்

சமீபத்தில் இரண்டு வகையான புதிய என்ஜின்கள், புதிய அம்சங்கள், புதிய கலர் போன்றவற்றுடன் வேகனார் காரை மாருதி நிறுவனம் மேம்படுத்தியது. எனினும், முந்தைய மாடல்களுக்கு மட்டுமே டிஸ்கவுண்ட் பலன்கள் கொடுக்கப்படுகிறது. முந்தைய 1.2 லிட்டர் வேரியண்ட் கொண்ட வேகனார் காருக்கு ரூ.41,000 வரையிலும், 1.0 லிட்டர் வேரியண்ட் கொண்ட காருக்கு ரூ.31,000 வரையிலும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஆல்டோ

இந்த மாதத்தில் சதவீத அடிப்படையில் பார்த்தால் இந்த காருக்கு தான் மிக அதிகப்படியான டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆல்டோவின் முந்தைய மாடல் என்பது 996 சிசி திறன் கொண்டதாகவும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் இருக்கிறது. இந்தக் காருக்கு ரூ.31,000 வரை சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர்

மாருதி நிறுவனத்தின் மாடல்களில் இந்த இரண்டு வகை கார்கள் தான் மிக, மிக அதிகப்படியாக விற்பனை ஆகி வரும் கார்களாகும். குறிப்பாக, எளிய மக்களின் தேர்வாக இது இருக்கிறது. ஸ்விஃப்ட் காருக்கு, அனைத்து மேனுவல் வேரியண்ட் மாடல்களை வாங்குகையில் ரூ.27,000 வரையிலும், ஆடோமேடிக் டிரான்மிஷன் கார் வாங்கும்போது ரூ.17,000 வரையிலும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Also read... எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்காக சோனியுடன் கைகோர்க்கும் ஹோண்டா நிறுவனம்...

இதேபோன்று டிசையர் சப்-காம்ப்பாக்ட் செடான் வகை கார்களை வாங்குகையில், மேனுவல் வேரியண்ட் மாடல்களுக்கு ரூ.27,000 வரையிலும், ஆட்டோமேடிக் டிரான்மிஷன் கார்களுக்கு ரூ.17,000 வரையிலும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

பிரீஸா

அடுத்த மாதத்தில் பிரீஸா கார்களில் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும், ஏற்கனவே உள்ள மாடலுக்கு ரூ.22,000 வரை இந்த மாதம் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

கார்களுக்கான டிஸ்கவுண்ட்களை நீங்கள் கேஷ் டிஸ்கவுண்ட், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் போன்ற வகைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Maruti, Maruti Suzuki

அடுத்த செய்தி