ஓட்டு போட்டால் இலவச பைக் சர்வீஸ், வாட்டர் சர்வீஸ்..! ஹீரோ மோட்டார்ஸ் புது ஆஃபர்

ஒவ்வொரு நகரத்திலும் வாக்குப்பதிவு நடந்துமுடிந்த அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை அமலில் இருக்கும்.

Web Desk | news18
Updated: April 15, 2019, 3:34 PM IST
ஓட்டு போட்டால் இலவச பைக் சர்வீஸ், வாட்டர் சர்வீஸ்..! ஹீரோ மோட்டார்ஸ் புது ஆஃபர்
(Photo: Hero MotoCorp)
Web Desk | news18
Updated: April 15, 2019, 3:34 PM IST
வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்கமளிக்க ஹீரோ மோட்டார்கார்ப் புதிய சலுகை ஒன்றைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

உலகின் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் இந்திய மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு சலுகையை ஹீரோ மோட்டார்கார்ப் வழங்குகிறது.

இதற்காக நாடு முழுவதும் உள்ள தனது 80 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இலவச பைக் சர்வீஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹீரோமோட்டார்கார்ப் டீலர்ஷிப் இடங்கள், ஷோரூம்கள், வொர்க் ஷாப்கள் என அனைத்து இடங்களிலும் ஹீரோ பைக் வைத்திருப்பவர்கள் ஓட்டுப்போட்ட அடையாள மை உடன் வந்து இலவச பைக் சர்வீஸ், வாட்டர் சர்வீஸ் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட பைக் சர்வீஸ்களுக்கு 199 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நகரத்திலும் வாக்குப்பதிவு நடந்துமுடிந்த அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை அமலில் இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த சேவைக்கும் கூட முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

 
Loading...தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...