வால்வோ எக்ஸ்சி 40 எஸ்யூவி காருக்கு ரூ.3.26 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு!

வால்வோ எக்ஸ்சி 40 எஸ்யூவி

ஸ்வீடிஷ் கார் தயாரிப்பாளரான வால்வோ கார் நிறுவனம் ரூ.3.26 லட்சம் என்ற அளவில் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வால்வோ கார் இந்தியா (Volvo Car India ) தனது மிகச்சிறிய எக்ஸ்சி 40 எஸ்யூவி-யில் (XC40 SUV) மிக பெரிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. ஐந்து இருக்கைகள் கொண்ட SUV-யின் எக்ஸ்ஷோரூம் விலை சமீபத்தில் ரூ .41.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இப்போது, ஸ்வீடிஷ் கார் தயாரிப்பாளரான வால்வோ கார் நிறுவனம் ரூ.3.26 லட்சம் என்ற அளவில் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ .41.25 லட்சமாக இருந்த காரின் Volvo XC40 SUV காரின் விலை தற்போது ரூ. 37.99 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) குறைந்துள்ளது. இந்தியாவில் Volvo XC40 காரானது T4 R-Design ட்ரிம்மில் (Volvo XC40 T4 R) விற்கப்பட்டு வருகிறது.

இது அதன் சிக்னேச்சர் டி-ஷேப்டு டே டைம் ரன்னிங் லேம்ப்-களை (DRLs) கொண்டுள்ளது. சிங்கிள் ஃபிரேம் ஃப்ரன்ட் கிரில் பளபளப்பான கருப்பு ஃபினிஷிங்க்கை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் 18 இன்ச் அலாய் வீல்களுக்கு மேல் ஒரு தடிமனான பிளாஸ்டிக் உறைப்பூச்சு இந்த எஸ்யூவி காருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது. ஒரு தனித்துவமான மற்றும் வலுவான சாலை இருப்பை அளிக்க வெளிப்புறத்தில் டூயல் டோன் கலர் மற்றும் வெர்ட்டிக்கில் டெயில் லேம்ப்ஸ்களை (vertical tail lamps) கொண்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி 40 காரின் உட்புறத்தை பொறுத்த வரை, 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்டரி (leather upholstery), ஹர்மன் கார்டன் ஸ்டீரியோ சிஸ்டம் (Harman Kardon stereo system), பவர்டு டெயில்கேட் (powered tailgate), 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் (12.3-inch instrument cluster), கீலெஸ் என்ட்ரி (keyless entry,) மற்றும் பனோரமிக் சன்ரூஃப் (panoramic sunroof) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்களில் இந்த கார் தகவமைப்பு பயணக் கட்டுப்பாடு (adaptive cruise control), லேன் கீப்பிங் எய்ட் (lane keeping aid), பார்க்கிங் அசிஸ்ட் கேமரா (parking assist camera) உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த எஸ்யூவி அதன் பிரிவில் ரேடார் அடிப்படையிலான செயலில் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஒரே கார் ஆகும், இது சிட்டி சேஃப்டி வித் ஸ்டீயரிங் அசிஸ்ட், வாகனங்கள், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பெரிய விலங்குகளுடன் ஏற்படும் மோதலை குறைப்பதற்கான collision mitigation support கொண்டுள்ளது.

Also read... புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் விரைவில் வெளியாகிறது ஹோண்டா பைக், ஸ்கூட்டர்கள்!

XC40 T4 R டிசைன் தற்போது பெட்ரோல் என்ஜின் விருப்பத்தில் நுழைவு நிலை எஸ்யூவி பிரிவில் மட்டுமே கிடைக்கிறது. இது 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் டர்போ சார்ஜ் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி மற்றும் 300 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. வால்வோ கார்ஸ் இந்தியா தற்போது நாடு முழுவதும் உள்ள 25 டீலர்ஷிப்கள் மூலம் மேற்கண்ட மெகா தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், வழங்கப்படும் தள்ளுபடிகள் குறித்த முழு தகவலைப் பெற உள்ளூர் விற்பனையாளரைச் சரிபார்த்து கொள்ளுங்கள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: