முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இந்தியாவில் வெளியாக உள்ள வோல்க்ஸ்வேகன் விர்டஸ் கார்.! அசரவைக்கும் சிறப்பம்சங்கள்...

இந்தியாவில் வெளியாக உள்ள வோல்க்ஸ்வேகன் விர்டஸ் கார்.! அசரவைக்கும் சிறப்பம்சங்கள்...

இந்தியாவில் வெளியாக உள்ள வோல்க்ஸ்வேகன் விர்டஸ் கார்

இந்தியாவில் வெளியாக உள்ள வோல்க்ஸ்வேகன் விர்டஸ் கார்

Volkswagen | வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், வோல்க்ஸ்வேகன் விர்டஸ் என்கிற புதிய வகை காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

  • Last Updated :

வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், வோல்க்ஸ்வேகன் விர்டஸ் என்கிற புதிய வகை காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதன் ஆரம்ப விலை ரூ.11.21 லட்சமாக இருக்கும் என்றும், எக்ஸ்-ஷோரூம் விலை என்பது ரூ.17.91 லட்சம் வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையானது வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ள அறிமுக விலை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வோல்க்ஸ்வேகன் கார் என்றாலே ஒரு தனி மரியாதை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அந்த காரின் அம்சங்களும், செயல்திறனும் தான். அந்த வகையில், தற்போது வெளியாக உள்ள வோல்க்ஸ்வேகன் விர்டஸ் காரில் MQB A0 IN இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்க உள்ளது. குறிப்பாக இது இந்தியாவிற்காக வடிவமைக்கப்பட்ட கார் வகைகளில் ஒன்றாகும். இந்த கார் இந்திய சந்தையில் வோல்க்ஸ்வேகனின் சிறந்த கார்களின் வரிசையில் நீண்ட காலமாக இயங்கும் என்று நம்பப்படுகிறது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா, ஸ்கோடா குஷாக் மற்றும் வோல்க்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி ஆகிய கார்களின் வரிசையில் தற்போது வோல்க்ஸ்வேகன் விர்டஸ் காரும் இடம் பெறுகிறது. வோல்க்ஸ்வேகன் விர்டஸ் கார் என்பது பல சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே கிடைக்கும் மாடல்களின் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷனாகும். வோல்க்ஸ்வேகனின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள படங்களின்படி, புதிய விர்டஸின் முன்புறம் கூர்மையான விளிம்புகளை கொண்டதாக உள்ளது. மேலும் அதில் உள்ள கிரில் மீது வோல்க்ஸ்வேகனின் லோகோ பொருத்தப்பட்டு உள்ளது. டி.ஆர்.எல்-களுடன் இணைக்கப்பட்ட எல்.இ.டி ஹெட்லேம்ப்களுடன் இந்த கார் உள்ளது.

Read More : மீண்டும் சந்தைக்கு வருகிறது இந்திய சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் கார்!

ஜெர்மன் வாகன உற்பத்தியாளரான வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்த விர்டஸ் கார் மாடலுக்கு டூயல் டோன் வண்ணங்களை பயன்படுத்தியுள்ளது. மேலும் OVRM, அலாய் சக்கரங்கள் மற்றும் GT பேட்ஜிங் ஆகியவற்றில் கருப்பு நிறங்களை பயன்படுத்தி உள்ளனர். இதன் கேபினுக்குள் விர்டஸ் 10-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.0-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், காற்றோட்டமான முன் இருக்கைகள், சுற்றுப்புற விளக்குகள், சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், வைப்பர்கள் போன்ற பல சிறப்பம்சங்களை இந்த காரில் பொருத்தி உள்ளனர்.

மேலும் இதில் டயர் பிரஷர் மானிட்டர், இ.எஸ்.சி, ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் ஆறு ஏர்பேக்குகளும் உள்ளது. இந்த கார் ஆறு-வேக கையேடு மற்றும் ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. இருப்பினும், 1.5L வேரியண்ட்டிற்கு 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் வசதி மட்டுமே வழங்கி உள்ளனர். இந்த புதிய வோல்க்ஸ்வேகன் விர்டஸ் காரானது ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, வோல்க்ஸ்வேகன் பிராண்ட் விரும்பிகளுக்கு இந்த கார் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நம்பலாம்.

First published:

Tags: Automobile, Trending, Viral, Volkswagen