வோல்க்ஸ்வேகன் கார்களுக்கு அளித்துள்ள செம தள்ளுபடி - இவ்வளவு விலை குறைவா?

வோல்க்ஸ்வேகன்

பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாகன விற்பனை சந்தை இந்த கொரோனா காலக்கட்டத்தில் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் அத்தியாவசிய தேவை தவிர ஆடம்பர விஷயங்கள் மீதான நாட்டம் மக்களிடையை குறைந்துள்ளது ஒரு காரணம். இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஜெர்மன் நிறுவனமான வோல்க்ஸ்வேகன் (Volkswagen) தங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல்களுக்கு தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ஸ் மற்றும் இதர சலுகைகளை அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் வோல்க்ஸ்வேகன் போலோ கார்கள் ரூ.55,000 வரை சலுகைகளும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ. 20,000 அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் வென்டோ எனப்படும் சேடன் வகை கார்கள் ரூ.10,000 வரை சலுகைகளும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.25,000 வரையும் அறிவித்துள்ளது.

வோல்க்ஸ்வேகன் போலோ

இந்த கார்களுக்கு ரூ. 30,000 வரை சலுகைகள் அறிவித்துள்ளது. இதில் டிரெண்ட்லைன் (Trendline), கம்ஃபோர்ட் லைன் (Comfortline), ஹைலைன் பிளஸ் (Highline Plus), மற்றும் GT வெர்ஷன் என நான்கு வகைகள் உண்டு. இதில் டிரெட்லைன் வகை கார்களுக்கு தள்ளுபடி விலையாக ரூ. 5.84 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்ஃபோர்ட் லைன் வகை கார்களுக்கு சிறப்பு விலையாக ரூ.6.99 லட்சமும், ஹைலைன் பிளஸ் மேனுவல் வெர்ஷன் ரூ.8.34 லட்சமும், ஆட்டோமேட்டிக் வெர்ஷன் ரூ.9.59 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே உள்ள போலோ GT வெர்ஷன் தள்ளுபடி விலையாக ரூ.9.19 லட்சமும் விற்பனை செய்யப்படுகிறது. மேலே குறிப்பிட்ட அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

வோல்க்ஸ்வேகன் வெண்டோ

நடுத்தர அளவுள்ள சேடன் வகை கார்களான வெண்டோ கார்கள் டிரெண்ட்லைன், கம்ஃபோர்ட் லைன், ஹைலைன் ஆகிய வகைகளில் கிடைக்கின்றன. இந்த கார்களின் விலை ரூ.8.69 லட்சம் முதல் ரூ. 13.19 லட்சம் வரையிலும் விலை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஹைலைன் பிளஸ் எக்ஸ்சேஞ்ச் மற்றும் சலுகை விலையானது முறையே ரூ.20,000 மற்றும் ரூ. 10,000 ஆகும். தற்போது ஹைலைன் பிளஸ் வகை கார்கள் சிறப்பு விலையாக மேனுவல் வெர்ஷன் ரூ. 11.19 லட்சமும், ஆட்டோமெட்டிக் வெர்ஷன் ரூ. 13.19 லட்சம் விலையிலும் கிடைக்கின்றன.

Also read... கோவிட் -19 தொற்று காரணமாக பராமரிப்பு பணிநிறுத்தத்தை மேலும் நீடித்த மாருதி சுசுகி!

மேலே சொன்ன அனைத்தும் எக்ஸ்ரூம் விலையாகும். இதுகுறித்து முறையாக தெரிந்து கொள்ள அருகில் உள்ள டீலர்களை அனுகுங்கள். வோல்க்ஸ்வேகன் India-spec T-Roc மற்றும் Tiguan all space மாடல்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. வோல்க்ஸ்வேகன் அறிவித்துள்ள இந்த சலுகையின் காரணமாக கார் விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: