ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வெண்டோ மற்றும் போலோ கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.78 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் விற்பனை மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. மிட் சைஸ் செடனான வெண்டோ மற்றும் ஹேட்ச்பேக் மாடலான போலோ கார்களை வாங்குபவர்களுக்காக சிறப்பு மார்ச் மாத சலுகையை அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்குள் வெண்டோ மற்றும் போலோ கார்களை வாங்குபவர்களுக்கு ரொக்கமாகவும், எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸ் போன்ற சலுகைகளை வாரி வழங்குகிறது ஃபோக்ஸ்வ்வேகன் நிறுவனம்.
வெண்டோ:
வெண்டோ Highline Plus வேரியண்டின் ஆட்டோமேடிக் மாடலுக்கு சலுகை ரூ.69,000ல் இருந்தும், மேனுவல் மாடலின் சலுகை அதிரடியாக ரூ.1.38 லட்சம் என்ற அளவிலும் கிடைக்கிறது. மேலும் கூடுதலாக 40,000 ரூபாய்க்கான சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன் மூலம் வெண்டோ மாடலுக்கு அதிகபட்சமாக 1.78 லட்ச ரூபாய் கிடைக்கிறது.
ஃபோக்ஸ்வ்வேகன் வெண்டோ காரின் ஆரம்ப விலை 8.69 லட்சமாகும், வேரியண்டுக்கு தகுந்தபடி அதிகபட்சமாக 13.68 லட்சம் வரையில் கிடைக்கிறது. Trendline, Comfortline, Highline மற்றும் Highline Plus என 4 வேரியண்ட்களில் இக்கார் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் போலோ:
ஃபோக்ஸ்வ்வேகன் நிறுவனத்தின் தொடக்க விலை மாடலாக விளங்கும் போலோ கார்களின் MPI மற்றும் TSI மாடல்கள் இரண்டிலும் 50,000 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கிறது. Trendline வேரியண்டை பொருத்தவரையில் 52,000 ரூபாய் வரை சலுகைகள் தரப்படுகிறது. Highline Plus MT வேரியண்டுக்கு 55,000 ரூபாயும், எக்ஸ்சேஞ்ச் சலுகையாக கூடுதலாக 30,000 ரூபாய் வரையும் சலுகை பெற முடியும்.
ஃபோக்ஸ்வ்வேகன் போலோ கார்கள் 6.01 லட்ச ரூபாய் தொடக்க விலையில் கிடைக்கிறது. வேரியண்டுக்கு தகுந்தபடி 9.92 லட்சம் ரூபாய் வரையிலும் விலை உள்ளது. Trendline, Comfortline, Highline Plus மற்றும் GT version என 4 மாடல்களில் இக்கார் கிடைக்கிறது.
மேற்கண்ட சலுகைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையிலானது. அருகாமையில் உள்ள டீலர்களிடம் கூடுதல் தகவல்களை கேட்டுப்பெறலாம்.