ஜெர்மனியின் முதன்மையான கார் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம், பயன்படுத்திய வாகனங்களை (used vehicles) நோக்கிய வாடிக்கையாளர்களின் விருப்பம் மாறுவதற்கு மத்தியில் இந்த ஆண்டு அதன் ப்ரீ-ஓன்ட் கார் சேல்ஸை (pre-owned car sales) 20,000 யூனிட்களாக இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதல் தாஸ் வெல்ட் ஆட்டோ ஷோரூமை அறிமுகப்படுத்தியதன் மூலம் வோக்ஸ்வேகன் கடந்த 2012-ல் பயன்படுத்தப்பட்ட கார் (used car) மார்க்கெட்டில் நுழைந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொற்று நீடித்த நேரத்தில் Volkswagen தனது Das WeltAuto 3.0-ஐ அறிமுகப்படுத்தியது. DWA வெப்சைட் என்பது பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் வசதியாக Volkswagen பிராண்டினுடைய டிஜிட்டல் விண்டோ ஆகும். Volkswagenநிறுவனம் கடந்த ஆண்டு 10,000 முன் ப்ரீ-ஓன்ட் கார்களை விற்பனை செய்த நிலையில், இந்த காலண்டர் ஆண்டில் தேவை அதிகரிப்பு காரணமாக 20,000 யூனிட்களை விற்பனை செய்யும் நம்பிக்கையில் உள்ளது.
இதனிடையே Volkswagen-ன் பேசெஞ்ர்ஸ் கார்ஸ் இந்தியா பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால், பர்சனல் மொபிலிட்டி ஆப்ஷன்ஸ்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் கார் வாங்கும் வசதி உள்ளவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் கார் வாங்கும் வாய்ப்பு அதிகம். புதிதாக கார் வாங்க சந்தைக்கு வருபவர்கள் தேவையை அதிகப்படுத்துகிறார்கள். இது இப்போது pre-owned car-களுக்கு மாறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | விற்பனை துவங்கிய 2 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த 650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன்... ராயல் என்ஃபீல்டு சாதனை
மேலும் பேசிய அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Volkswagen-ல் நியமிக்கப்பட்ட Frost & Sullivan-ன் ஆய்வின்படி, இந்தியாவில் ப்ரீ-ஓன்ட் கார் மார்க்கெட் வரும் 2025-ஆம் ஆண்டில் சுமார் 4-4.5 மில்லியன் கார்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய கார் சந்தையை (new car market) விட கிட்டத்தட்ட 1.5 - 2 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே இந்த பிரிவிலும், எங்களது தாஸ் வெல்ட் ஆட்டோ பிராண்டுடன் நாங்கள் வலுவான முன்னிலையில் இருக்கிறோம். கடந்த ஆண்டு, நாங்கள் 10,000 ப்ரீ-ஓன்ட் கார்களை விற்றோம். இந்த ஆண்டு, நாங்கள் 20,000 ப்ரீ-ஓன்ட் யூனிட்களை விற்கும் இலக்கில் இருக்கிறோம்.
இந்த வாடிக்கையாளர் போக்குடன் முன்னோக்கிச் செல்லும் போது, புதிய மற்றும் ப்ரீ-ஓன்ட் கார் விற்பனை ஆகிய இரண்டு ஸ்ட்ரீம்களையும் நாங்கள் வைத்திருப்பதை உறுதி செய்ய நினைகிறோம்" என்று குப்தா கூறினார். தொடர்ந்து பேசிய ஆஷிஷ் குப்தா, ப்ரீமியம் மற்றும் சொகுசு பிரிவுகளிலும் அதிக விலை கொண்ட கார்களில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ALSO READ | BSA-வின் கோல்ட் ஸ்டார் 650 vs Royal Enfield-ன் இன்டர்செப்டர் 650 - ஒப்பீடு
தொற்று காரணமாக 2021-ஆம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள செமி-கண்டக்டர் மற்றும் சப்ளை-செயின் சிக்கல்களின் பற்றாக்குறை மிக பெரிய சவாலாக உள்ளது இருப்பதாகவும் கூறினார். உலகளாவிய ஆய்வாளர்கள் மற்றும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், இது குறைந்தபட்சம் 2022 முதல் பாதி வரை தொடரும் என்றார். மற்றொரு மிகப்பெரிய லாக்டவுன் அல்லது கொரோனாவின் மற்றொரு அலை இல்லாவிட்டால், மூன்றாம் காலாண்டில் மட்டுமே இந்த நிலைமை சீராகும் என்று நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Volkswagen