• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்திய வாடிக்கையாளர்களுக்காக நியூ-ஜென் போலா உருவாக்கத்தில் களமிறங்கியுள்ள Volkswagen!

இந்திய வாடிக்கையாளர்களுக்காக நியூ-ஜென் போலா உருவாக்கத்தில் களமிறங்கியுள்ள Volkswagen!

வோக்ஸ்வாகன்

வோக்ஸ்வாகன்

2021ம் ஆண்டு வெளியிடப்பட உள்ள போலோவில், 1 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வோக்ஸ்வாகன் (Volkswagen) இறுதியாக 2021ம் ஆண்டில் MQB-A0-IN இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய போலோவை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு இந்திய சந்தையில் இரண்டு புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த ஜெர்மன் உற்பத்தியாளரான வோக்ஸ்வாகன் தயாராகி வருகிறது என்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது பழைய வோக்ஸ்வாகன் போலோ  ஹேட்ச்பேக்கில் (Volkswagen Polo hatchback) புதிய தலைமுறையை கொண்டு வர நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வோக்ஸ்வாகன் போலோ இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் போலோ-வின் புதிய ஜென் ஹெட்ச் மாடலின் அறிமுகத்தை தவிர்க்க நிறுவனம் முடிவு செய்தது. ஏனெனில் ஒரு சிறிய ஹேட்ச்பேக்கிற்கு இந்திய சந்தை ரூ.10 லட்சத்திற்கு மேல் செலுத்த தயாராகவில்லை என்பது தான் காரணம் என்று நிறுவனம் கூறியிருந்தது.

இருப்பினும், இப்போது ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் சிறந்த வேரியண்ட் i20-க்கு ரூ.11 லட்சத்தை வசூலிக்கிறது. இதன் காரணமாக நிறுவனம் அதன் நியூ ஜென் ஹேட்ச்பேக்கை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த புதிய போலோ இந்தியா குறிப்பிட்ட MQB-A0-IN இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது.

வோக்ஸ்வாகன் ஏற்கனவே சர்வதேச சந்தை விற்பனைக்காக ஒரு ஃபேஸ்லிப்ஃட் போலோவில் பணியாற்றி வருகிறது. சர்வதேச அளவில் தற்போதைய-ஜென் ஹெட்ச் கடந்த 2017ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த மாடலின் புதுப்பிப்புக்கு இது நல்ல நேரமாக இருக்கலாம். இருப்பினும் இந்தியா-ஸ்பெக் போலோ சர்வதேச மாறுபாட்டிலிருந்து வேறுபட்டிருக்கும்.

இதன் வெளிப்புற அமைப்பில் புதிய ஸ்டைலிங் தோற்றத்தை எதிர்பார்க்கலாம். அதே சமயம் உள்ளேயும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப புதுப்பிப்புகளைப் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்கள், சஸ்பென்ஷன் கூறுகள், சுவிட்ச் கியர் அனைத்தும் மற்ற வாகனங்களை போல பொதுவானதாக இருக்கக்கூடும்.

Also read... கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்திய Maruti Suzuki நிறுவனம் - புதிய விலை விவரம்!

2021ம் ஆண்டு வெளியிடப்பட உள்ள போலோவில், 1 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இது 110 பிஎஸ் சக்தியையும் 175 என்எம் முறுக்குவிசையையும் வெளியேற்றும். ஆனால் வேறு சில என்ஜின் விருப்பங்களையும் எதிர்பார்க்கலாம். மனுவல் மற்றும் தானியங்கி விருப்பங்கள் இரண்டிலும் பரிமாற்றம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2021-ல் இந்த நிறுவனத்தின் பல கார்கள் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால், இது வோக்ஸ்வாகனுக்கு ஒரு நிகழ்வு நிறைந்த ஆண்டாக இருக்கும். மேலும், இது ஈ.வி.க்களை அறிமுகப்படுத்தும் காலம் என்பதால், கார் உற்பத்தியாளர் நிறுவனம் 2022 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவுக்கான ஈ.வி. வோக்ஸ்வாகனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: