பேட்டரி கார் உற்பத்தியை அதிகரிக்கிறது ஃபோக்ஸ்வேகன்

news18
Updated: May 23, 2018, 7:34 AM IST
பேட்டரி கார் உற்பத்தியை அதிகரிக்கிறது ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன்
news18
Updated: May 23, 2018, 7:34 AM IST
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பேட்டரி கார் உற்பத்தியை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் குறைந்த விலையில் பேட்டடி கார்களை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.

உலகம் முழுவதும் தற்போது  இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஆலைகளில் மூன்றில் பேட்டரி கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 16 ஆலைகளில் பேட்டரி கார்களை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அடைய திட்டமிட்டிருப்பதாக   நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மத்தியாஸ் முல்லர் தெரிவித்துள்ளார்.

தற்போது மூன்று ஆலைகளில் தயாராகும் பேட்டரி வாகனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 6 ஆலைகளில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கார் உற்பத்திக்கு ஏற்ப பேட்டரி தட்டுப்பாடின்றி கிடைக்க துணை நிறுவனங்களை இந்நிறுவனம் முடிக்கிவிட்டுல்ளது.


ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் பெரிய நிறுவனங்களுடன் பேட்டரி விநியோகத்துக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 2,00 கோடி டாலருக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக வட அமெரிக்கா சந்தையில் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஃபோக்ஸ்வேகன்.

ஆண்டுக்கு 30 லட்சம் பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை 2025-ல் எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக முல்லர் தெரிவித்துள்ளார். மேலும் பேட்டரி வாகனங்களை பயன்படுத்துவதற்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளார்.
First published: March 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...