இந்தியாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலவச சர்வீஸ் - வோக்ஸ்வேகன் அறிவிப்பு!

வேக்ஸ்வேகன் டீலர்ஷிப் அருகில் இருந்தாலும் அங்கு சென்றும் வாடிக்கையாளர்கள் பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலவச சர்வீஸ் - வோக்ஸ்வேகன் அறிவிப்பு!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 13, 2019, 5:49 PM IST
  • Share this:
இந்தியாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வேக்ஸ்வேகன் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இலவச வாகன சர்வீஸ் அளிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஒரு சிறு உதவியாக வோக்ஸ்வேகன் நிறுவனம் இலவச வாகன சேவையை அறிமுகம் செய்கிறது.

வெள்ளம் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் 1800 102 1155 அல்லது 1800 419 1155 என்ற டோல் எண்ணில் இலவசமாகத் தொடர்புகொண்டு இலவச வாகன சேவையப் பெற்றுக்கொள்ளலாம். வேக்ஸ்வேகன் டீலர்ஷிப் அருகில் இருந்தாலும் அங்கு சென்றும் வாடிக்கையாளர்கள் பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உதவியாளர்கள் முதல் வாகன உதிரிப் பாகங்கள் வரை அனைத்தையும் தயார் நிலையில் மக்களுக்காக வைத்திருக்கிறதாம் வோக்ஸ்வேகன். “வாடிக்கையாளர்களின் சவால் மிகுந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு சிறு உதவியை நாங்கள் அளிக்கிறோம். மூன்று மாநிலங்களிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்கிறார் வோக்ஸ்வேகன் வாடிக்கையாளர் சேவை மைய இயக்குநர் ஸ்டீஃபன் நாப்.

மேலும் பார்க்க: இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் ஹூண்டாய்-க்கு முதலிடம்!
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்