மஹிந்திராவின் புதிய பார்ன் எலக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் (Born Electric Platform) எம்இபி எலக்ட்ரிக் பாகங்களை (MEB electric components) பயன்படுத்துவது குறித்த ஆய்விற்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (எம்&எம்) நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட நோக்கத்தை மதிப்பிடுவதற்கான ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
மஹிந்திரா தனது "பார்ன் எலக்ட்ரிக் பிளாட்ஃபார்மை" எலெக்ட்ரிக் மோட்டார்கள், பேட்டரி சிஸ்டம் காம்போனென்ட்ஸ் மற்றும் பேட்டரி செல்கள் போன்ற எம்இபி எலெக்ட்ரிக் காம்போனென்ட்ஸ்களுடன் சித்தப்படுத்த விரும்புகிறது. இதற்காக ஃபோக்ஸ்வேகன் உடன் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது. இதன் கீழ் மதிப்பீட்டு கட்டத்திற்கான பிணைப்பு விதிகள் (binding rules) மற்றும் விநியோகத்தின் பிணைப்பு அல்லாத நோக்கம் (non-binding scope of supply) கண்டறியப்பட உள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட பிணைப்பு விநியோக ஒப்பந்தமானது இணக்கமான முறையில் நடத்தப்பட்டு 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓப்பன் வெஹிக்கல் பிளாட்ஃபார்ம் ஆக வடிவமைக்கப்பட்ட, எம்இபி எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்ம் மற்றும் அதன் காம்போனென்ட்ஸ் ஆனது கார் உற்பத்தியாளர்கள் தங்கள் மின்மயமாக்கப்பட்ட வாகனங்களின் போர்ட்ஃபோலியோவை விரைவாகவும் செலவு குறைந்ததாகவும் உருவாக்க அனுமதிக்கிறது. இந்த முக்கிய நோக்கத்தின் கீழ் தான் இவ்விரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இது வாகனங்கள் சார்ந்த வளர்ச்சிகளில் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.
ஃபோக்ஸ்வேகன் குழும நிர்வாகக் குழுவின் ஒரு உறுப்பினரும், ஃபோக்ஸ்வேகன் க்ரூப் காம்போனென்ட்ஸின் சிஓஇ-வுமான தாமஸ் ஷ்மால், “மஹிந்திரா, இந்தியாவில் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்பேஸில் ஒரு முன்னோடியாகவும், எங்களின் எம்இபி எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்முக்கு ஒரு சிறந்த கூட்டாளியாகவும் உள்ளது. மஹிந்திராவுடன் இணைந்து, இந்தியாவின் மின்மயமாக்கலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க விரும்புகிறோம், இது ஒரு மகத்தான வளர்ச்சி மட்டுமின்றி காலநிலை பாதுகாப்பிற்கு மிகவும் பொருத்தமான ஒரு மிகப்பெரிய வாகன சந்தையும் ஆகும். எம்இபி, இவி உலகில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மிகவும் முக்கியமானது ஆகும்" என்று கூறி உள்ளார்.
Also see... எலக்ட்ரிக் வாகனம் வாங்கினால் இந்தியாவில் வரி விலக்கு பெறலாம்.!
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், ஆட்டோ மற்றும் பார்ம் செக்டார்ஸின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர், “எலக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்பேஸில் குறிப்பிடத்தக்க உலகளாவிய முதலீட்டாளரான ஃபோக்ஸ்வேகன் உடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஃபோக்ஸ்வேகனின் விரிவான தொழில்நுட்பம், புதுமை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் ஒருங்கிணைப்பு ஆனது எங்களின் அடுத்த தலைமுறை பார்ன் எலக்ட்ரிக் பிளாட்ஃபார்மை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கும் என்று நம்புகிறோம்" என்று கூறி உள்ளார்.
ஃபோக்ஸ்வேகனின் எம்இபி எலக்ட்ரிக் பிளாட்ஃபார்மை இந்த குழுவின் பிராண்டுகளான ஃபோக்ஸ்வேகன், ஆவ்டி, ஸ்கோடா மற்றும் சீட் / கப்ரா மற்றும் வெளிப்புற கூட்டாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு சுமார் மூன்று மில்லியன் வாகனங்களைக் கொண்ட உலகளாவிய டாப்-5 வாகன சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த சந்தை 2030-க்குள் ஐந்து மில்லியன் வாகனங்கள் வரை வளரக்கூடும் என்றும் கணிகப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.