Home /News /automobile /

விவேக் எகஸ்பிரஸ்... 9 மாநிலம், 4247 கி.மீ பயணம்... இந்தியாவின் மிக நீளமான வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்

விவேக் எகஸ்பிரஸ்... 9 மாநிலம், 4247 கி.மீ பயணம்... இந்தியாவின் மிக நீளமான வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்

ரயில்

ரயில்

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி நாட்டின் இந்த நீளமான ட்ரெயின் ரூட் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்றாக இருந்து வருகிறது இந்தியன் ரயில்வே. பல மாநிலங்களில் இருந்து தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினமும் பல லட்சம் பயணிகளை தினமும் சுமந்து செல்கின்றன இந்திய ரயில்கள்.

    கிட்டத்தட்ட 2 நூற்றாண்டுகளின் வரலாறு மற்றும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் நெட்வொர்க்குடன், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தின் உயிர்நாடியாக இருக்கிறது இந்தியன் ரயில்வே. இந்த மாபெரும் ரயில்வே நெட்வொர்க் நாட்டில் அருகருகில் இருக்கும் மாநிலங்களை மட்டும் இணைக்காமல் சில தொலைதூர பகுதிகள் மற்றும் மாநிலங்களையும் இணைத்துள்ளது இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.

    இந்தியன் ரயில்வே-யின் ரயில் சேவையில் மிக நீண்ட ரயில் பயணம் நேரத்தை கொண்ட ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது. அதை பற்றி தான் இங்கே நாம் பார்க்க போகிறோம். இது மொத்தம் 79 முதல் 80 மணி நேரம், 4,247 கிமீ மற்றும் 9 மாநிலங்களை உள்ளடக்கிய ரயில் சேவையாக உள்ளது.

    அசாம் மாநிலத்தின் திப்ருகர் (Dibrugarh) பகுதியில் இருந்து நம் தமிழகத்தின் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் (Vivek Express) தான் தற்போது தூரம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் (கடந்து செல்லும் தூரத்தின் அடிப்படையில்) மிக நீண்ட ரயில்களில் ஒன்று ஆகும்.நாட்டின் மிக நீளமான ரயில் பாதையில் செல்லும் ரயில் என்ற பெருமையை விவேக் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.

    இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள திப்ருகர் ரயில் நிலையத்திற்கும், நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கும் இடையிலான சுமார் 4,247 கிமீ என்ற மிக நீண்ட தொலைவை விவேக் எக்ஸ்பிரஸ் சேவை கவர் செய்கிறது. விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலானது தனது ஒரு பயணத்தில் மொத்தம் 9 மாநிலங்களைக் கடக்கிறது. 58 ஸ்டாப்களை கொண்ட இந்த ரயில் அசாம், நாகாலாந்து, பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு வழியே பயணிக்கிறது.

    கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கும் டாடா மோட்டார்ஸ்.!

    இந்திய ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி இருந்த போது 2011-12ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தான் விவேக் எக்ஸ்பிரஸ் குறித்து அறிவிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி நாட்டின் இந்த நீளமான ட்ரெயின் ரூட் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

    நான்கு வழித்தடங்களில் இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் சேவையில் திப்ருகார் முதல் கன்னியாகுமரி வரையும் ஒன்று. விவேக் எக்ஸ்பிரஸின் மற்ற வழித்தடங்களில் குஜராத்தின் ஓகா முதல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி வரை, மும்பையின் பாந்த்ரா முதல் ஜம்முவின் கத்ரா வரை, மேற்கு வங்கத்தின் ஹவுரா முதல் கர்நாடகாவின் மங்களூரு வரை ஆகும். நாட்டிலேயே மிக நீளமானது என்றாலும், உலகளவில் விவேக் எக்ஸ்பிரஸ் 9-வது இடத்தில் உள்ளது. உலகின் மிக நீளமான ரயில் பாதை மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் உள்ளது. இந்த ரயில் சேவையில் பயணம் ஆறு நாட்கள் ஆகும். இது மேற்கு ரஷ்யாவை நாட்டின் தூர கிழக்குடன் இணைக்கிறது. சுமார் 9,250 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Indian Railways, Railway, Train

    அடுத்த செய்தி