சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் விஸ்தாரா... பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் இனி கிடையாது...!

தொடர்ந்து இதர விமானங்களிலும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் தரப்படுவது நிறுத்தப்படும் என்றும் விஸ்தாரா நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் விஸ்தாரா... பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் இனி கிடையாது...!
விஸ்தாரா (Image: Reuters)
  • News18
  • Last Updated: July 25, 2019, 2:04 PM IST
  • Share this:
விஸ்தாரா விமானத்தில் பயணிகளுக்குத் தரப்படும் தனித்தனி ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் இனி வழங்கப்படமாட்டாது என அந்நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக விஸ்தார விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் டெல்லி- மும்பை விமானங்களில் பயணிகளுக்கு ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் தருவதில்லை என்ற முடிவு செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தனித்தனியே 200மி.லி. அளவிலான தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

தொடர்ந்து இதர விமானங்களிலும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் தரப்படுவது நிறுத்தப்படும் என்றும் விஸ்தாரா நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பளிக்கும் பொருட்களை 2019-ம் ஆண்டு முடிவுக்குள் 50சதவிகிதம் வரையில் குறைக்கவும் முடிவெடுத்துள்ளது, இந்தியாவிலேயே எகானமி வகுப்புக்கு மக்கும் வகையிலான உணவுப் பொட்டல்ங்கள் தரும் விமான நிர்வாகமாக விஸ்தாரா உள்ளது.


சமீபத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்காக பெங்களூரு விமான நிலையம் சார்பில் விஸ்தாரா நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் முதல் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விஸ்தாரா விமானங்களிலும் பயோமெட்ரிக் போர்டிங் முறை செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் பார்க்க: லைசென்ஸ் இல்லையா ₹5 ஆயிரம்... குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ₹10 ஆயிரம் அபராதம்!
First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading