ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை அதிகரிப்பு

கொரோனாவால் ஏற்பட்ட பின்னடைவுக்கு இடையிலும் இந்தியாவில் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் கூடியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை அதிகரிப்பு
கோப்புப்படம்
  • Share this:
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியாவின், வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 17% கூடியுள்ளது. இந்நிறுவனத்தின் உள்ளூர் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட, இந்த ஆகஸ்ட்டில் 20% அதிகரித்துள்ளது. அதேநேரம் வாகன ஏற்றுமதி 15% சரிவடைந்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் விற்பனை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்த ஆண்டு 20% அதிகரித்துள்ளது. இதனைத் தவிர, கியா மோட்டார்ஸ் விற்பனை 74%-ம், எம்.ஜி மோட்டார்ஸ் விற்பனை 41% அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனை 7.55 சதவிதம் அதிகரித்துள்ளது. மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தில், ஒட்டுமொத்த விற்பனை 16% சரிவை சந்தித்து இருந்தாலும், பயணிகள் வாகன விற்பனை 1% உயர்ந்துள்ளது.


ஊரடங்கு தளர்வுகள் காரணமாகவும், பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், இனி வரும் காலங்களில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க... உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல் & டீசல் விலை - இன்றைய நிலவரம் என்ன?

அதேநேரம் ஹோண்டா கார்ஸ் விற்பனை கடந்த ஆகஸ்ட்டை விட தற்போது 9% குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்பனை 8291.. இந்த ஆண்டு 7509 கார்கள் மட்டுமே விற்றுள்ளன.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading