தமிழகத்தில் மே மாதம் 80% சரிந்த வாகன பதிவு - வெறும் 25 வாகனங்கள் மட்டுமே விற்பனை

தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் புதிய வாகனங்களுக்கான பதிவு 80 சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் மே மாதம் 80% சரிந்த வாகன பதிவு - வெறும் 25 வாகனங்கள் மட்டுமே விற்பனை
மாதிரி படம் (Reuters)
  • Share this:
ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் 1.37 லட்சமாக இருந்த இருசக்கர வாகன பதிவு இந்த ஆண்டு 30,000 குறைந்துள்ளது.

மூன்று சக்கர வாகனங்களை பொருத்தவரை விற்பனையே நடைபெறவில்லை என்று சொல்லுமளவிற்கு வெறும் 25 வாகனங்கள் மட்டுமே மே மாதத்தில் விற்பனையாகியுள்ளன.அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 99.6 சதவிகிதம் மூன்று சக்கர வாகன பதிவு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 16 ஆயிரத்து 597 கார்கள் விற்பனையான நிலையில் இந்த மே மாதம் 2277 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

வணிக வாகனங்களுக்கான பதிவு 98.98 சதவிகிதமும், டிராக்டர்களுக்கான பதிவு 82.33 சதவீதமும் சரிவடைந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் பார்க்கும்போது மே மாதத்தில் 89 சதவிகிதம் வரை வாகனங்களுக்கான பதிவு குறைந்துள்ளது.

Also read... வங்கி அதிகாரி உத்தரவால் கட்டிலோடு தாயை இழுத்துச் சென்ற மகள்
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading