Home /News /automobile /

அடேங்கப்பா! இலங்கையில் சொகுசு வீட்டை விட செகண்ட் ஹேண்ட் கார் விலை அதிகமாம்..

அடேங்கப்பா! இலங்கையில் சொகுசு வீட்டை விட செகண்ட் ஹேண்ட் கார் விலை அதிகமாம்..

Image : pzAxe / Shutterstock.com

Image : pzAxe / Shutterstock.com

Used Cars Price in SriLanka | கடந்த ஆண்டு தொடக்கத்தில் கார் வாங்கியவர்களின் ஆறுதலான விஷயம் என்ன என்றால், நல்ல ரீசேல் வேல்யூ கொண்ட பொருளில் அவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதுதான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பொருளாதாரத்தில் திவால் நிலைக்கு சென்று கொண்டிருக்கும் இலங்கையில், அனைத்து பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது.

காய்கறி, மளிகை பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், புதிய கார்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா! இருந்தாலும், கார் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் மக்கள் அந்த எண்ணத்தை விட்டு கொடுக்க முன் வருவதாக தெரியவில்லை.

விடாமுயற்சியுடன் செகண்ட் ஹேண்ட் கார் ஒன்றாவது வாங்கிவிட வேண்டும் என்பது இலங்கையைச் சேர்ந்த மக்களின் கனவாக இருக்கிறது. ஆனால், இவையும் கூட விலை கூடுதலாக இருக்கிறது என்பதுதான் சோகமான உண்மை.

5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸர் விலை 312,500 டாலர்கள் அல்லது ஏறக்குறைய ரூ.2.34 கோடி ஆகும். 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஃபியட் கார் தற்போது ரூ.6.17 கோடிக்கு விற்பனையாகி வருகிறது.



கார் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது அதன் தற்போதைய கண்டிசன் என்ன என்பது குறித்து கவலைப்படாமல் இலங்கையைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான வேட்டையை நடத்தி வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிர்ணயம் செய்யப்படும் கார்களின் விலையை காட்டிலும், இலங்கையில் சற்று கூடுதலாகவே இருக்கிறது.

Also Read : பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் கார் இருக்கைகள்...

இலங்கையின் பொருளாதாரம் திவால் நிலை அடையும் சூழலில் இருப்பதும், கடந்த சில வாரங்களில் பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதுமே இதுபோன்ற விலைவாசி உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

நாட்டின் டாலர் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக, அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்த மற்ற பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.



இலங்கையில் தனி வாகனம் பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது மட்டுமே தற்போதைய ஒரே வாய்ப்பாக இருக்கிறது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

Also Read : அடுத்தது ஓலா எலக்ட்ரிக் கார் தான் - சிஇஓ பவிஷ் அகர்வால்

கார்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் கூரையைப் பொத்துக்கொண்டு விலை உயர்ந்துள்ள சேதி அங்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், சில வகை கார்களின் விலை என்பது இலங்கையில் பிரதான இடத்தில் சொகுசு வீடு வாங்குவதை காட்டிலும் விலை அதிகம் என்பது தான் கொடுமையிலும், கொடுமையாக இருக்கிறது.



சிறிய ரக கார்கள் மற்றும் சாதாரண செடான் வகை கார்கள் விலை கூடுதலாக உள்ளபோதிலும் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன.

Also Read : 3 புதிய எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்தும் ஜீப் இந்தியா...!

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கார் வாங்கியவர்களின் ஆறுதலான விஷயம் என்ன என்றால், நல்ல ரீசேல் வேல்யூ கொண்ட பொருளில் அவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதுதான். எது, எப்படியோ, இன்றைய சூழலில், இலங்கையில் கார் வைத்திருக்கும் அனைவருமே பாக்கியசாலிகள் தான்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Car, Srilanka

அடுத்த செய்தி