அமெரிக்கா- ஈரான் போர் பதற்றத்தால் இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதென்ற பயமும் சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது.

அமெரிக்கா- ஈரான் போர் பதற்றத்தால் இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிப்பு!
மாதிரிப்படம் (Tasnim News Agency/via REUTERS)
  • News18
  • Last Updated: January 7, 2020, 7:59 PM IST
  • Share this:
அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படும் சூழலால் வளைகுடா நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி வணிகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தலைமை ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் தாக்குதலில் பலியானதையடுத்து பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதென்ற பயமும் சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு இப்பிரச்னை வணிக ரீதியான பிரச்னைகளைத் தற்போது ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினந்தினம் உயர்ந்து வருகிறது. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் சரத் குமார் சராஃப் கூறுகையில், “இந்தியாவுக்கான முக்கிய வர்த்தக கூட்டணி நாடாக ஈரான் உள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையே மூண்டுள்ள பிரச்னை நிச்சயம் நம்மை பாதிக்கும். ஈரான் - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதைய சூழலில் பெரும் சரக்குகள் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன” என்றார்.

மேலும் பார்க்க: நாளை நாடு தழுவிய மாபெரும் ’பாரத் பந்த்’- வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்க வாய்ப்பு!
First published: January 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்