புதிய கலர் விருப்பத்தில் வெளியாக உள்ள 'ராயல் என்பீல்டு ஹிமாலயன்'... லீக்கான புகைப்படங்கள்!

புதிய கலர் விருப்பத்தில் வெளியாக உள்ள 'ராயல் என்பீல்டு ஹிமாலயன்'... லீக்கான புகைப்படங்கள்!

2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் சிறந்த பிரேக் வசதிக்காக இரட்டை சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் வருகிறது. இதன் சஸ்பென்ஷன்  டியூடிஸ் வசதியை முன்பக்கத்தில் உள்ள டெலஸ்கோப் ஃபோர்க்கஸ் மற்றும் பின்புறத்தில் உள்ள மோனோஷாக் யூனிட்டால் வழிநடத்தப்படுகின்றன.

2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் சிறந்த பிரேக் வசதிக்காக இரட்டை சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் வருகிறது. இதன் சஸ்பென்ஷன்  டியூடிஸ் வசதியை முன்பக்கத்தில் உள்ள டெலஸ்கோப் ஃபோர்க்கஸ் மற்றும் பின்புறத்தில் உள்ள மோனோஷாக் யூனிட்டால் வழிநடத்தப்படுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
மோட்டார் வாகன ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ராயல் என்பீல்டின் "Himalayan" நாளை இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், புதிய பச்சை நிறத்தில் டீலர்ஷிப் குடோன் ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதன் மூலம் ஹிமாலயன் அசத்தலான கலர் வேரியண்டில் வருவது உறுதியாகியுள்ளது. அதன்படி ஹிமாலயன் இப்போது பச்சை, வெள்ளை மற்றும் சில்வர் உள்ளிட்ட பல்வேறு புதிய வண்ணங்களில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 

இது ஏற்கனவே இருக்கும் வண்ணங்களான கிரானைட் பிளாக், ஸ்னோ ஒயிட், ஸ்லீட் கிரே, கிராவல் கிரே மற்றும் ராக் ரெட் ஆகிய விருப்பங்களுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, ஹிமாலயன் மாடலின் இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்சன் ஏற்கனவே நிறுவனத்தின் டீலர்ஷிப்பில் நுழைந்துள்ளது. மேலும், சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் இந்த புதுப்பிக்கப்பட்ட பைக் பச்சை நிறத்தில் காணப்பட்டதற்கான புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தன. மேலும் கலர் அப்டேட் மட்டுமல்லாமல், இந்த இரு சக்கர வாகனம் டிரிப்பர் நேவிகேஷன் முறையுடன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. 

Also read... சூப்பரான சலுகையை அறிவித்துள்ள மஹிந்திரா நிறுவனம்: குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ.80,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!

இந்த அப்கிரேட் மூலம், வாகன ஓட்டிகள் தங்களது ஸ்மார்ட்போனை புளூடூத் மூலம் இணைக்க முடியும் மற்றும் செல்ல வேண்டிய இடத்திற்கான டர்ன் நேவிகேஷன் தகவலையும் பெறலாம். 2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயனில் எல்.ஈ.டி ரிங் கொண்ட புதிய ஹெட்லேம்ப் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. என்ஜினைப் பொறுத்தவரை, அனைத்து புதிய பைக்கிலும் 411 சிசி, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 6,500 ஆர்பிஎம்மில் 24.3 பிஹெச்பி சக்தியையும், 4 என்எம் முதல் 4500 ஆர்பிஎம் வேகத்தில் 32 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 

2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் சிறந்த பிரேக் வசதிக்காக இரட்டை சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் வருகிறது. இதன் சஸ்பென்ஷன்  டியூடிஸ் வசதியை முன்பக்கத்தில் உள்ள டெலஸ்கோப் ஃபோர்க்கஸ் மற்றும் பின்புறத்தில் உள்ள மோனோஷாக் யூனிட்டால் வழிநடத்தப்படுகின்றன. ஹிமாலயன் தவிர, இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள சில வெளியீடுகளில் அடுத்த ஜென் ஆர் கிளாசிக் 350, இன்டர்செப்டர் 350, ஃபேஸ்லிஃப்டட் இன்டர்செப்டர், கான்டினென்டல் 650 மற்றும் 650 சிசி க்ரூஸர் பைக் ஆகியவை அடங்கும். இதற்கிடையில், ராயல் என்ஃபீல்ட் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிளாசிக் 350 புதிய தலைமுறையை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதால் பைக் பிரியர்களுக்கு இன்னும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது என்று சொல்லலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: