ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

2021ம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் சிறந்த எஸ்யூவி கார்கள்!

2021ம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் சிறந்த எஸ்யூவி கார்கள்!

டாடா கிராவிடாஸ் ஸ்பை ஷாட்

டாடா கிராவிடாஸ் ஸ்பை ஷாட்

புதிய வாகன அறிமுகங்களின் அடிப்படையில் முந்தைய ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

உலகளாவிய தொற்றுநோய் காரணமாக 2020ம் ஆண்டு தொடக்கத்தில் வாகன விற்பனை என்பது பெரிய வீழ்ச்சியை கண்டது. கடந்த ஆண்டு இறுதியில் பண்டிகை காலம் காரணமாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனை ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்தது. மேலும் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தன. 

இருப்பினும், புதிய வாகன அறிமுகங்களின் அடிப்படையில் முந்தைய ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு தங்களின் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 2021ம் ஆண்டு வாகன ஆர்வலர்களுக்கு வியக்கத்தக்க காலகட்டமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, இந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ஐந்து வாகனங்களின் விவரங்களை பார்ப்போம்.

டாடா கிராவிடாஸ் (Tata Gravitas)

டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய த்ரீ-ரோ வெர்சனாக முதல் வரிசையில் இந்த வாகனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ‘டாடா கிராவிடாஸ்’ காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதன் தயாரிப்பு ஆரம்பமாகிவிட்டது என்றும் இந்த எஸ்யூவி ஜனவரி 26ம் தேதி அறிமுகமாக உள்ளது என்பதையும் உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹாரியர் போலவே கிராவிடாஸும் எஃப்.சி.ஏ-சோர்ஸ்டு 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 350 என்எம் பீக் டார்க்குடன் 170 பிஎஸ் அதிகபட்ச சக்தியை உற்பத்தி செய்கிறது. அதேபோல 150 பிஎஸ் வரம்பில் சக்தி வெளியீட்டைக் கொண்ட கிராவிடாஸுக்கு 1.5 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்ஷன் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 (Mahindra XUV500)

மற்றொரு உள்நாட்டு கார் உற்பத்தியாளரான மஹிந்திராவின் இரண்டாம் தலைமுறை XUV500, தற்போது நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாகனங்களில் ஒன்றாகும். இது ஏப்ரல் மாதத்தில் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த XUV500 -ன் 2021 மறு செய்கை, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் மல்டி-இன்ஃபோ டிஸ்ப்ளே (MID) மற்றும் ஃப்ளஷ் வகை கதவு கைப்பிடிகள் போன்ற அம்சங்களுடன் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி 500 உடன் லெவல் ஒன் அட்டானமஸ் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியுடன் BSNLன் ரூ.1999 ப்ரீபெய்ட் வருடாந்திர பிளானில் திருத்தம்!

டாடா ஹார்ன்பில் (Tata Hornbill)

டாடா மோட்டார்ஸ் மைக்ரோ-எஸ்யூவி கான்செப்ட் வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ‘ஹார்ன்பில்’ (Hornbill) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய கார் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமாகும். இது நெக்சானுக்கு அடுத்தபடியாக ALFA (Agile Light Flexible Advanced) தளத்தின் அடிப்படையில் மிகவும் மலிவு விலை எஸ்யூவியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் ஏழு அங்குல மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் இந்த மைக்ரோ எஸ்யூவி வழங்கப்படலாம். இது ஒரு செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஹர்மன் கார்டன் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதும், மாருதி சுசுகியின் இக்னிஸ்  (Maruti Suzuki’s Ignis) மற்றும் மஹிந்திரா கே.யூ.வி 100 என்.எக்ஸ்.டி (Mahindra KUV100 NXT) போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

ஸ்கோடா விஷன் ஐ.என் (Skoda Vision IN)

Czech ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஸ்கோடா தனது காம்பாக்ட் எஸ்யூவி கான்செப்ட் வாகனத்தை 2019ம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போவில் விஷன் ஐஎன் (Vision IN) என்ற பெயரில் வெளியிட்டது. இருப்பினும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேலும் ஒரு வெளியீட்டைக் காணலாம். வடிவமைப்பின் முன்னணியில் உள்ள விஷன் ஐஎன், ஆட்டோ எக்ஸ்போவில் வெளிப்படுத்தப்பட்ட கருத்து மாதிரியுடன் மிகவும் ஒத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு வெவ்வேறு பவர் ட்ரெயின்களில் வழங்கப்படும். அதன்படி 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் எஞ்சின், 110 பிஎஸ் அதிகப்பட்ச சக்தியையும் 175 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இரண்டாவது, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும் இது டிரான்ஸ்மிஷன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் விருப்பமான செவன் ஸ்பீட் டிரெக்ட்-ஷிப்ட் கியர்பாக்ஸ் (DSG) உடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வோக்ஸ்வாகன் டைகன் (Volkswagen Taigun)

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட வோக்ஸ்வாகன் டைகன் (Volkswagen Taigun) காரின் ப்ரொடக்சன்- ரெடி வெர்சன், ஏற்கனவே தனது புதிய எஸ்யூவியின் முதல் டீஸர் படங்களை பகிர்ந்துள்ளது. இதுவரை இரண்டு தென் கொரிய வாகன உற்பத்தியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காம்பாக்ட் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஜெர்மன் வாகன உற்பத்தியாளர்களின் வருகையை "டைகன்" குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டதும், வோக்ஸ்வாகன் (Volkswagen) வெளியிட உள்ள புதிய வாகனம், கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு (Hyundai Creta) போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஜெர்மனி நாட்டின் மிகவும் மலிவு விலையுள்ள எஸ்யூவியாகவும் இது இருக்கும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mahindra, Suv car, TATA