HOME»NEWS»AUTOMOBILE»upcoming toyota fortuner facelift spied undisguised ahead of india launch on january 6 vin ghta

ஜனவரி 6ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது Toyota Fortuner-ன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்!

பார்ச்சூனரின் புதிய ஃபேஸ்லிஃப்டட் வெர்சன் அதன் முன் மற்றும் பின்புற பகுதிகளில் பல புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது லெஜெண்டர் ஒரு புதிய மாறுபாடுகளை கொண்டு வருகிறது.

ஜனவரி 6ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது Toyota Fortuner-ன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்!
டொயோட்டா பார்ச்சூனர் லெஜெண்டர்
  • News18
  • Last Updated :
  • Share this:

டொயோட்டா (Toyota) நிறுவனம் சமீபத்தில் அவர்களின் பிரபலமான எம்பிவி இன்னோவா கிரிஸ்டாவின் (MPV Innova Crysta) ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் டொயோட்டாவுக்கு மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக இந்த வாகனம் இருந்தது. இந்த நிலையில், ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்கள் அதன் ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் (Fortuner SUV) புதிய ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்டை இந்தியாவில் அடுத்தாண்டு ஜனவரி 6ன் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. 

இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் காரின் படங்களும் ஆன்லைனில் வலம் வருகின்றன. முன்னதாக நியூ-ஜென் ஃபார்ச்சூனர் எஸ்யூவி (Fortuner SUV) இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் உலகளாவிய ரீதியில் அறிமுகமானது. அப்போது நிறுவனம் பார்ச்சூனர் லெஜெண்டர் (Fortuner Legender) என்ற சிறப்பு வேரியண்ட் மாடலையும் அறிமுகப்படுத்தியது. மேலும் ஃபேஸ் - லிப்ஃடட் பார்ச்சூனரின் பிரீமியம் பதிப்பாக லெஜெண்டர் கருதப்பட்டது. 

இந்த இரண்டு மாடல்களும் வெளிப்புற மற்றும் உட்புற புதுப்பிப்புகளின் வரிசையில் வேறுபடுகின்றன. அவை அதிக சந்தை அம்சங்களைக் கொண்டுள்ளன. தற்போது இந்த புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி சமீபத்தில் இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி விளம்பர (TVC) படப்பிடிப்பின் போது காணப்பட்டது. இந்த சூழலில் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன், லெஜெண்டர் வேரியண்ட்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டொயோட்டா நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது.பார்ச்சூனர் மாடல் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல நிறுவப்பட்ட பிராண்ட் ஆகும். மேலும் இது புதிய வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நல்ல மறுவிற்பனை மதிப்பையும் தருகிறது. ஏழு இருக்கைகள் கொண்ட இந்த எஸ்யூவி, ஃபோர்டு எண்டெவர் (Ford Endeavour), மஹிந்திரா அல்துராஸ் ஜி 4 (Mahindra Alturas G4) மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜி குளோஸ்டர் (MG Gloster) ஆகிய போட்டியாளர்களிடம் இருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டது.  

பார்ச்சூனரின் புதிய ஃபேஸ்லிஃப்டட் வெர்சன் அதன் முன் மற்றும் பின்புற பகுதிகளில் பல புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது லெஜெண்டர் ஒரு புதிய மாறுபாடுகளை கொண்டு வருகிறது. அதில் ஒரு கூர்மையான அப்பர் பிராண்ட் கிரில், எல்.ஈ.டி பகல்நேர இயங்கும் விளக்குகள் கொண்ட ஸ்லீக்கர் எல்.ஈ.டி ஹெட்லேம்ப்கள், ஒரு நியூ ஸ்போர்ட்டியர் பிளாக் லோயர் ரேடியேட்டர் கிரில், நியூ பிராண்ட் பம்பர், பியானோ பிளாக் எக்ஸ்டென்ஷன்ஸ் மற்றும் 20 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Also read... பல்வேறு அம்சங்களுடன் ஹூவாமி ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

மேலும், ராப்அரவுண்ட் எல்இடி டெயில் விளக்குகள், ரியர் ஸ்பாய்லர், ரியர் பம்பரில் தனித்துவமான வெர்டிகல் பிளேடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி ஒயிட் பேர்ல் சிஎஸ்ஸில் வருவதால் இது டூயல் டோன் பெயிண்ட் திட்டத்தில் வருகிறது. அதன்படி இந்த மாடலில் ரூஃப் மற்றும் சி-பில்லர் பிளாக் கோட் அம்சத்துடன் வருகிறது. ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் வெளிப்புற ரியர்வியூ கண்ணாடியின் கீழ் பகுதியும் கருப்பு நிறத்தில் இருக்கும். 

இதுதவிர உட்புற எஸ்யூவியின் புதுப்பிப்புகளில் மல்டி இன்பர்மேஷன் டிஸ்பிளே மற்றும் லெதர் அமைப்பைக் கொண்ட கேபினுக்கு டூயல் -டோன் டிரீட்மென்ட் கொண்ட ஒரு மாற்றப்பட்ட இன்ஸ்டருமென்டல் கிளஸ்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய ஃபார்ச்சூனர் லெஜெண்டர் பிஎஸ் 6 இணக்கமான 2.8 லிட்டர் டீசல் யூனிட்டால் இயக்கப்படும். இது 204 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும், 500 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும். டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் சிக்ஸ் ஸ்பீட் மனுவல் மற்றும் சிக்ஸ் ஸ்பீட் சீக்வன்ஷியல் ஆட்டோமேட்டிக் யூனிட் ஆகியவை அடங்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: