• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விரைவில் புதிய Tata Safari பிரம்மாண்ட லான்ச் - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

விரைவில் புதிய Tata Safari பிரம்மாண்ட லான்ச் - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய சஃபாரி கார்களும் எக்ஸ் ஷோரூம் விலையின்படி 15.5 லட்சம் முதல் 21 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இம்மாத இறுதியில் பிரம்மாண்டமாக அறிமுகமாக இருக்கும் டாடா சஃபாரி வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 6 அல்லது 7 சீட்டுகள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார் ( tata motors) நிறுவனம் இம்மாத இறுதியில் டாடா நியூ சஃபாரி (Tata New Safari) காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புத்தாண்டின் மிகப்பெரிய Launch ஆக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 2020ம் ஆண்டு கிராவிட்டாஸில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய சஃபாரியில் இரண்டு சீட்டிங் லே அவுட்டுன், ஆறு மற்றும் 7 சீட்டர் வெர்சன்களில் அறிமுகப்படுத்தபடுகிறது.  டாடா நிறுவனத்தின் ஹாரியர் (Tata Harrier) காரின் மாடலைக் கொண்டு, நியூ டாடா சஃபாரி காரின் மாடல் மேம்படுத்தப்பட்டது. 

டாடா ஹாரியர் கார் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டதால், அதனை மையமாக வைத்து நியூ டாடா சஃபாரியை சந்தையில் களமிறக்க டாடா நிறுவனம் திட்டமிட்டது.  அதன்படி, டாடா நியூ சஃபாரி கார் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய வெர்சனில் இடம்பெற்றிருந்த வெளிப்புற மற்றும் உள்புற டிசைன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  ஹாரியர் கார் மாடலுக்குப் பிறகு OMEGA  பிளாட்பாஃர்மில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது கார் டாடா நியூ சஃபாரி ஆகும்.

கூடுதல் சீட்களை பொறுத்தும் வகையில் டாடா சஃபாரியின் பின்புறத்தில ஓவர்ஹேங் (Ovarhang) கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் வளைந்த எல்.ஈ.டி டெயில் விளக்குகள் LED Tail Light), புதிய டெயில்கேட் மற்றும் பம்பர் ஆகியவற்றைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹாரியர் கார் மாடலைப்போல் சாலையில் செல்லும்போது கம்பீரமான கட்டமைப்புடன் சஃபாரி காட்சியளிக்கும். பனோரமிக் சன்ரூஃப், ஐஆர்ஏ வசதியுடன் touchscreen infotainment சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கட்டளைகள் தெரிவிக்கும் வசதி உள்ளிட்டவை பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளன. 

ஒன்பது-ஸ்பீக்கர் ஆடியோ, டிஜிட்டல் டிரைவரின் காட்சி,  ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோலர், ஆன்/ஆப் செய்வதற்கு புஷ் பட்டன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Also read... இந்திய வாடிக்கையாளர்களுக்காக நியூ-ஜென் போலா உருவாக்கத்தில் களமிறங்கியுள்ள Volkswagen!

தொடக்கம் முதலே 4 வகையான வேரியண்டுகளில் சஃபாரி கிடைக்க உள்ளது. 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கார், 170 பிஎஸ் மற்றும் 350 NM பவரை கொடுக்கும். இந்த காரில் சிக்ஸ் ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ் மிஷனுடன் இணைக்கப்பட்ட சிக்ஸ் ஸ்பீடு டர்க்யூ கன்வெர்டர் இருக்கிறது. 

ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய சஃபாரி கார்களும் எக்ஸ் ஷோரூம் விலையின்படி 15.5 லட்சம் முதல் 21 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனம் இந்தக் கார்களுக்கான விலையை அறிவிக்க உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: