ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எஸ்யூவி மாடல் கார்கள் இதோ!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எஸ்யூவி மாடல் கார்கள் இதோ!

 5 எஸ்யூவி மாடல்

5 எஸ்யூவி மாடல்

Tata Motors SUV Launch in India | டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய காம்பெக்ட் எஸ்யூவியான டாடா பஞ்ச், அதன் வடிவமைப்பு, 5 ஸ்டார் ரேட்டிங் பாதுகாப்பு, கவர்ச்சிக்கரமான விலையின் காரணமாக இந்திய சந்தையில் தனக்கான மார்க்கெட்டை பிடித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...

  கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான அற்புதமான அறிமுகங்களுடன், டாடா மோட்டார்ஸ் இந்திய கார் சந்தையில், குறிப்பாக SUV பிரிவில் அதன் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது. டாடாவின் SUV வரிசையானது ஹாரியர் மற்றும் புதிய-ஜென் சஃபாரி போன்றவற்றையும் கொண்டுள்ளது. மேலும் 2022ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட உள்ள 5 SUV கார்களின் பட்டியல் இதோ...

  1. டாடா நெக்ஸான் இவி 2022:

  இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரான டாடா நெக்ஸான் இவி இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியாக உள்ளது. தற்போதுள்ள மாடலை விட மிகப்பெரிய பேட்டரி பேக்அப் உடன் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. அதாவது தற்போது உள்ள காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும், அதனை சற்றே மேம்படுத்தி 400 கிலோ மீட்டர் வரை பயணிக்க வைக்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

  2. டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்:

  டாடாவின் பிரபலமான ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பான ஹாரியர் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய வெளியீடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட டாடா ஹாரியர் கார் நடுத்தர குடும்பத்தினரின் நம்பர் ஒன் விருப்பமாக இருந்து வருகிறது. இதில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் முயன்று வருகிறது.

  ALSO READ | ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு!

  வடிவமைப்பு மற்றும் அசத்தல் இன்டீரியர் உடன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியர் எஸ்யூவி பெட்ரோல் வகையிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள ஹாரியர் எஸ்யூவி 2 லிட்டர் டீசல் டேங்குடன் மட்டுமே கிடைத்து வரும் நிலையில், 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்குடன் புதிய மாடலை அறிமுகப்படுத்தும் வேலையில் டாடா நிறுவனம் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

  3. டாடா சியரா:

  2020 ஆட்டோ எக்ஸ்போவில், சியாரா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. எஸ்யூவி கான்செப்ட் டாடா சியாரா எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் 2022ம் ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

  ALSO READ | பெட்ரோல், டீசல் கவலை இல்லை - 10 மணி நேரம் இயங்கும் பேட்டரி ட்ராக்டரை வடிவமைத்து அசத்திய இளம் விவசாயி

  4. டாடா பிளாக்பேர்ட்:

  டாடா மோட்டார் நிறுவனம் தனது ப்ரீமியம் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் வரிசையை மேம்படுத்தும் விதமாக பிளாக்பேர்ட் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த எஸ்யூவி மாடல் கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் உடன் அறிமுகமாக உள்ளது. தனது சக போட்டியாளர்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வாகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிளாக்பேர்ட் மாடலை களமிறக்க உள்ளது.

  5. டாடா பஞ்ச் iTurbo:

  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய காம்பெக்ட் எஸ்யூவியான டாடா பஞ்ச், அதன் வடிவமைப்பு, 5 ஸ்டார் ரேட்டிங் பாதுகாப்பு, கவர்ச்சிக்கரமான விலையின் காரணமாக இந்திய சந்தையில் தனக்கான மார்க்கெட்டை பிடித்துள்ளது. தற்போது டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா பஞ்ச் iTurbo எஸ்யூவியை இந்த ஆண்டு இறுதியில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மாடல் 86 பிஎஸ் ஆற்றலையும் 113 எம்என் முறுக்குவிசையை உற்பத்தி செய்யும் வகையில் 1.2 லிட்டர் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் யூனிட் உடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Suv car, Tata motors