• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விரைவில் ஜப்பானில் அறிமுகமாக உள்ள சுசுகி ஆல்டோவின் விவரங்கள் ஆன்லைனில் லீக்!

விரைவில் ஜப்பானில் அறிமுகமாக உள்ள சுசுகி ஆல்டோவின் விவரங்கள் ஆன்லைனில் லீக்!

சுசுகி ஆல்டோ

சுசுகி ஆல்டோ

இந்த கார் தற்போதைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது நீளமாகவும், அகலமாகவும், உயரமாகவும் தெரிகிறது.

  • Share this:
மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய தலைமுறை ஆல்டோ (new-gen Alto) காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய 2022 ஆல்டோவை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் இதற்காக காத்திருக்கும் நிலையில், இதன் தாய் நிறுவனமான சுசுகி ஜப்பானிய மார்க்கெட்டிற்கான புதிய தலைமுறை ஆல்டோ அப்டேட்டை வெளியிட தயாராக உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே ஜப்பான்-ஸ்பெக் மாடலின் டிசைன் தொடர்பான புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆகி இருக்கின்றன.

ஆனால் ஆல்டோவின் இந்த வெர்ஷன் இந்தியாவிற்கு வராது ஜப்பானுக்கு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜப்பான் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அடுத்த தலைமுறை ஆல்டோ சுமார் 7 ஆண்டுகளில் முழு மாடல் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளது இதுவே முதல் முறை ஆகும். தற்போது லீக்காகி இருக்கும் ஜப்பான்-ஸ்பெக்கின் இந்திய வெர்ஷன் முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கும். இந்தியா-ஸ்பெக் புதிய 2022 மாருதி ஆல்டோ ஏற்கனவே நம் நாட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கார் தற்போதைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது நீளமாகவும், அகலமாகவும், உயரமாகவும் தெரிகிறது. ஆனால் ஜப்பானிய -ஸ்பெக் நாம் பார்த்த கடைசி-ஜென் வேகன்ஆர் (last-gen WagonR) போன்றே boxier டிசைனை பெறுகிறது. இதன் தனித்துவமான ஸ்டைலிங், இந்திய வெர்ஷனோடு ஒப்பிடும்போது சிறிய ஹட்ச் தன்மையை கொடுப்பதாக தோன்றுகிறது. நீலம்/வெள்ளை மற்றும் சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்கள் ஹட்ச் தனித்து நிற்பதை உறுதி செய்கின்றன.

Also read... குறிப்பிட்ட வாகன மாடல்களின் விலையை ரூ.22 லட்சம் வரை உயர்த்திய Audi - விவரங்கள் உள்ளே!

ஆன்லைனில் லீக்காகி இருக்கும் படங்களை கொண்டு பார்க்கும் போது, ஜப்பானிய-ஸ்பெக் ஆல்ட்டோ மாடல் வெர்டிக்கிள் ஸ்டாண்டிங் ஏசி வென்ட்களுடன் 7.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டை கொண்டு வரும் என தெரிகிறது. மேலும் மேனுவல் ஏசி, ஸ்டீயரிங்-மவுண்ட்டட் ஆடியோ கன்ட்ரோல்ஸ், பார்ட்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் அலாய் வீல்கள் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஜப்பானில் அறிமுகமாக உள்ள இந்த கார் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 69 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் 796சிசி, 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் வாய்ப்பு அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிற்காக நிறுவனம் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை இதில் ஸ்டாண்டர்டாக சேர்க்கலாம் என தெரிகிறது. அதே போல சுசுகி நிறுவனம் ஜப்பானில் அறிமுக்கப்படுத்த உள்ள நியூ-ஜென் ஆல்டோவில் 1.0-லிட்டர் K10 இன்ஜினை மீண்டும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. இது 67 bhp மற்றும் 90 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும். ஆனால் இது குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: