ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள SUV, MPV மாடல் கார்கள் - எப்போது தெரியுமா?

இந்தியாவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள SUV, MPV மாடல் கார்கள் - எப்போது தெரியுமா?

 மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனமும் புதிய ஸ்கார்பியோ மாடலை அறிமுகப்படுத்த உள்ளது

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

இந்தியாவில் காம்பாக்ட் எஸ்.யூ.வி மாடல் கார்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு விரைவில் வெளியாக உள்ள நடுத்தர 3 வரிசை எஸ்.யூ.விக்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த சில மாதங்களில் இந்த வரிசையில் ஏற்கனவே ஹூண்டாய் அல்காசர் மற்றும் டாடா சஃபாரி என இரண்டு மாடல்கள் மார்க்கெட்டுக்குள் நுழைந்துள்ளன. 5 சீட்டுகளைக் கொண்டு நடுத்தர எஸ்.யூ.வி மாடல்கள் பிரபலமாகி வருவதால், அந்த மாடல்களை இறக்க நிறுவனங்கள் போட்டி போட்டுகின்றன. அந்தவகையில் அடுத்தடுத்து இந்தியாவில் வெளியாக உள்ள எஸ்.யூ.வி மற்றும் எம்.பி.வி கார்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

1. 2021 மஹிந்திரா XUV700

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தார் வாகனங்களை வெளியிட்ட மஹிந்திரா நிறுவனம், இந்த ஆண்டு 2021 மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 700 அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்த உள்ள எக்ஸ்.யூ.வி 700 மாடலில் பிளஷ் கைப்பிடிகள், ஸ்கை-ரூப் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ ஹெட்லேம்ப் இன்டென்சிட்டி பூஸ்டர் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம், ரேடார் சார்ந்து இயங்கும் குரூயிஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் உள்ளது. மஹிந்திரா தனது XUV700 மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல் என இருவித என்ஜின்களை வழங்க இருக்கிறது. இவை முறையே 200 பி.ஹெச்.பி. பவர், 185 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

2. 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனமும் புதிய ஸ்கார்பியோ மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே இருக்கும் மாடலைவிட அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றங்கள் ஸ்கார்பியோ காரில் இருக்கும் என கூறியுள்ள மஹிந்திரா, இப்போதிருக்கும் காரை விட அகலம் மற்றும் நீளமாக இருக்கும் என கூறியுள்ளது. இந்த மாடல் நிறுவனத்தின் பிரெஷ் டிசைன் எனவும் தெரிவித்துள்ளது. லேடர் பிரேம் சேஸில் அறிமுகப்படுத்த உள்ள இந்தக் கார்களானது 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின், 2.0 பெட்ரோல் என்ஜின் என இரண்டு பியூயல் மாடல்களிலும் வெளியாக உள்ளன. என்ஜின் பவர் குறித்த விவரம் வெளியாகவில்லை.

3. 2022 ஜீப் மெரிடியன்

5 சீட்டர்களைக் கொண்ட நடுத்தர எஸ்.யூ.வி மாடலை மெரிடியன் அறிமுகப்படுத்துகிறது. காரின் முன்பக்க பேனல்கள் காம்பஸ் பார்மேட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. நீளமான ரீர் டோர்கள், அப்ரைட் ரீர் டிசைனும் ஜீப் மெரிடியனில் இடம்பெற உள்ளது. உயர்தர கார்களில் உள்ள லக்ஷூரி மெட்டீரியல்கள் இந்த ஜீப்பிலும் இடம்பெற்றுள்ளது. 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்களை உடைய என்ஜினைக் கொண்ட இந்தக் கார் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

4. கியா கே.பி.ஓய் MPV

புதிய செக்மெண்ட் கார்கள் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் கியா மோட்டார்ஸ் அறிவித்தது. குறிப்பாக 7 சீட்டுகளைக் கொண்டவையாக அந்த கார்கள் இருக்கும் எனவும் கூறியது. கியா கார்னிவெல் மாடல் கார்களைக் விட விலை குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது. 4.5 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கார், ஹூண்டாயின் கிரெட்டா அல்காசரில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. 3 வரிசை சீட்டர்களுடன் 6 அல்லது 7 சீட்களை பொருத்திக்கொள்ளும் அம்சம் இருக்கும் என கியா தெரிவித்துள்ளது. முக்கியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

5. மாருதி சுசூகி XL6 பேஸ்லிப்ட்

2019 ஆம் ஆண்டு மாருதி சுசூகி நிறுவனம் எக்ஸ் எல் 6 MPV மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. எர்டிகாவின் 2ம் தலைமுறை மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் காரில் வித்தியாசமான ஸ்டைலில் சீட்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், இந்த மாடலுக்கான வரவேற்பு போதிய அளவில் இல்லை. இதனையடுத்து இந்த மாடலை மேம்படுத்த முடிவு செய்த மாருதி நிறுவனம், வரும் நாட்களில் புதிய எக்ஸ் எல்6 பேஸ் லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மெக்கானிக்கல் மாற்றம் எதுவும் இருக்காது. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இருக்கும். இது 105 ஹெச்.பி மற்றும் 138 Nm பீக் டர்கியூவைக் கொடுக்கும்.

6. மஹிந்திரா பொலீரோ நியோ பிளஸ்

புதிய கார்கள் அறிமுக லிஸ்டில் முதலில் இடம்பெற்றிருந்த மஹிந்திரா நிறுவனம் கடைசி இடத்திலும் உள்ளது. பொலீரோ நியோ என்ற மாடலை விரைவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொலீரோ நியோவில் 7 சீட்டுகள் இருக்கும். TUV300 Plus-ன் மறுவடிவமே பொலீரோ நியோ பிளஸ் எனக் கூறலாம். இதன் என்ஜின் அமைப்பு 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜினில் மட்டுமே உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Automobile, India, Jeep, Mahindra, Suv car