Skoda Kushaq SUV : ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் குஷாக் எஸ்யூவி கார்கள் விரைவில் அறிமுகம்!

குஷாக் எஸ்யூவி கார்கள்

இந்த காரில் எல்இடி ஹெட்லைட், 5 சீட்டர், 17 இன்ச் அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, 10 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மை ஸ்கோடா கனெக்டிவிட்டி, 6 ஸ்பீக்கர் உடன் மியூசிக் சிஸ்டம், குரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

  • Share this:
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் குஷாக் என்ற புதிய காரை வடிவமைத்து வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ் கார்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருந்து வந்த நிலையில், இந்த காரை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

புனேவில் உள்ள ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் விரைவில் குஷாக் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. குஷாக் காரின் ஒரு சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை மாதம் முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி.,யின் செயல்திறன் வியக்க வைக்கிறது. இதன் சோதனை ஓட்டம் 17 லட்சம் கிலோ மீட்டர் துாரத்திற்கு வெற்றிகரமாக நடந்திருக்கிறது. புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி கட்டமைப்புக் கொள்கையை தழுவி இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட எம்க்யூபி ஐஎன் ஏ0 (MQB-A0-IN) என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.



இது MQB -A0 இயங்குதளத்தின் மாறுபாடாகும். இந்த காரில் 92 சதவீதம் உள்நாட்டு பாகங்கள்தான் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

ALSO READ | கிராஷ் டெஸ்டில் சாதித்த சென்னை தயாரிப்பு ரெனால்ட் ட்ரைபர் கார்!

இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் இந்த கார் உற்பத்தி செய்யப்படுவதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. உலகெங்கிலும், இந்தியாவில் உள்ள எங்கள் அணிகளுக்கு இடையிலான ஒரு சிறந்த ஒத்துழைப்புக்கு இது சான்றாக உள்ளது என்று ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் குர்பிரதாப் போபராய் கூறியுள்ளார்.



இந்த காரில் எல்இடி ஹெட்லைட், 5 சீட்டர், 17 இன்ச் அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, 10 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மை ஸ்கோடா கனெக்டிவிட்டி, 6 ஸ்பீக்கர் உடன் மியூசிக் சிஸ்டம், குரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதன்1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜி ன், 115 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ALSO READ | 2026க்குள் இந்தியாவில் 5 டோர் வெர்சன் தார் உட்பட 9 எஸ்யூவிக்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்!

இந்த காரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. பல்வேறு சிறப்பம்சங்கள், காரின் வடிவமைப்பு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருப்பதால் விற்பனையில் இந்த கார் புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவுகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: