Home /News /automobile /

என்னது.? இது ரெண்டும் ராயல் என்ஃபீல்டு பைக்கா - அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் 2 புதிய மாடல்கள்!

என்னது.? இது ரெண்டும் ராயல் என்ஃபீல்டு பைக்கா - அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் 2 புதிய மாடல்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Royal Enfield Himalayan 450 & Scram 450 Bikes | வெளியான ஸ்பை புகைப்படங்களின் வழியாக, ராயல் என்ஃபீல்ட்டின் "அடுத்த தலைமுறை" ஹிமாலயன் 450 ஏடிவி பைக் ஆனது மற்றொரு மாடலான ஸ்க்ராம் 450 (Scram 450) மாடல் உடன் "ஜோடியாக" டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

மேலும் படிக்கவும் ...
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் இமாலயன் அட்வென்ச்சர் டூரர் வரம்பின் கீழ் சில அற்புதமான "திட்டங்களை" கொண்டு வருவதாக தெரிகிறது, ஏனெனில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் அதன் முழு ப்ரொடெக்ட் போர்ட்ஃபோலியோவையும் அப்டேட் செய்ய உள்ளது. சில காலமாகேவ புதிய ஜெனரேஷன் ஹிமாலயன் 450 ஏடிவி (Himalayan 450 ADV) பைக்கின் அறிமுகம் குறித்த செய்திகள் நிலவி வரும் வேளையில், குறிப்பிட்ட பைக்கின் 'ஸ்பை' புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி, "என்னது? இது ராயல் என்ஃபீல்டு பைக்கா?!" என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

வெளியான ஸ்பை புகைப்படங்களின் வழியாக, ராயல் என்ஃபீல்ட்டின் "அடுத்த தலைமுறை" ஹிமாலயன் 450 ஏடிவி பைக் ஆனது மற்றொரு மாடலான ஸ்க்ராம் 450 (Scram 450) மாடல் உடன் "ஜோடியாக" டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இந்த இரண்டு பைக்குகளுமே அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், தற்போது ராயல் என்ஃபீல்டு வழங்கும் ஹிமாலயன் 411 மற்றும் ஸ்க்ராம் 411 மாடல்களின் அதே செட்டப்பை இந்த மாடல்களும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்லேன் (Rushlane) வழியாக அணுக கிடைத்துள்ள குறிப்பிட்ட பைக்குகளின் ஸ்பை புகைப்படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

ஏனெனில் கிடைக்கப்பெற்றுள்ள லேட்டஸ்ட் ஸ்பை புகைப்படங்களில், புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 450, மற்றும் வரவிருக்கும் ஹிமாலயன் 450 மாடல்களில் நாம் முன்னர் பார்த்த அதே சஸ்பென்ஷன் செட்டப், ஃப்ரேம் மற்றும் எஞ்சின் இருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும், ஸ்க்ராம்ப்ளர் வேரியண்ட் ஆனது புதிய ஃப்யூயல் லேன்க்ஸ்-களை (fuel lanks) பெறுகிறது மற்றும் ஸ்டாண்டர்ட் ஹிமாலயன் ஆனது அப்ஸைட்-டவுன் யுனிட்ற்கு பதிலாக கன்வென்ஷ்னல் ஃப்ராண்ட் போர்க்ஸ்-களை (conventional front forks) பெறுகிறது.

Royal Enfield Scram 450. (Photo: Rushlane)


மேலும் ஸ்க்ராம்ப்ளர் வேரியண்ட் ஆனது 17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டூயல்-பர்போஸ் கொண்ட டயர்ககளை பெறுவது போல் தெரிகிறது. உடன் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், தட்டையான ஹேண்டில்பார், எளிமையான டூல் டயல் மற்றும் பெரிய அளவிலான சிங்கிள்-பீஸ் சீட் ஆகியவைகளையும் காண முடிகிறது. புதிய ஜெனரேஷன் ஹிமாலயன் 450 மற்றும் ஸ்க்ராம் 450 மாடல்களின் எஞ்சின் யூனிட்கள் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், இந்த பைக்குகள் 411 சிசி யூனிட்டுடன் தற்போது வழங்கப்படுவதை விட சிறந்த அவுட்புட் உடன் வர வாய்ப்புள்ளது.

Also Read : ராயல் என்பீல்டு இன்டர்செப்ட்டார், கான்டினென்டல் GT ஆகிய பைக்குகளின் இ.எம்.ஐ லோன் பற்றிய தகவல்கள் இதோ!

வரவிருக்கும் ஹிமாலயன் ஏடிவி மாடல் ஆனது 24 பிஎச்பி பவர் மற்றும் 32 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதன் எஞ்சின், ரைடு-பை-வயர் தொழில்நுட்பத்துடன் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ரைடர்கள் ட்ரிப் மோட்-களை தேர்வு செய்யவும் மற்றும் தேவைப்படும் போது செயல்திறனை அதிகரிக்கவும் முடியும்.

Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்

மேலும் வெளியான ஸ்பை புகைப்படங்களின் வழியாக, வரவிருக்கும் ஹிமாலயன் பைக் ஆனது எரிபொருள் திறன் மற்றும் வரம்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு பெரிய ஃப்யூயல் டேங்க், கனெக்டிவிட்டி விருப்பங்களுடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட பல மேம்படுத்தல்களை பார்க்க முடிகிறது. இந்த பைக் 21 இன்ச் முன் பக்க மற்றும் 17 இன்ச் பின் பக்க ஸ்போக் வீலில் உடன் டூயல்-பர்போஸ் டயர்களுடன் வருவது போல் தெரிகிறது.

Also Read : மாற்றியமைக்கப்பட்ட யமஹா லிபரோ ரெட்ரோ பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா.? 

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பைக்குகளின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வமான வார்த்தைகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் கூட இரண்டு பைக்குகளும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Royal enfield

அடுத்த செய்தி