RE தண்டர்பேர்டு பைக்குக்கு மாற்றாக மீட்டியார் 350... கசிந்த விலை நிலவரம்..!
பழங்கால தண்டர்பேர்டு 350X போல பெட்ரோல் டேங்க் நிறத்திலேயே ரிம் டேப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350
- News18 Tamil
- Last Updated: April 30, 2020, 10:47 AM IST
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது தண்டர்பேர்டு 350 பைக்குக்கு மாற்றாக புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ள செய்தி பல காலமாக உலவி வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய பைக்கின் புகைப்படங்கள் மற்றும் விலை நிலவரம் இணையதளங்களில் கசிந்துள்ளது.
புதிய மாற்று அறிமுகமாக ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 விற்பனைக்கு வர உள்ளது. இப்புதிய பைக்கில் சீட்டிங் வசதி மிகவும் பரந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஹேண்டில்பார் மிகவும் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் நீண்ட பயணத்துக்கு ஏற்ற செளகரிய வசதியுடன் இருக்கையும், கால் வைக்கும் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.
350cc என்ஜின், BS-VI மாசுக்கட்டுப்பாடு விதிமுறையின் கீழ் இந்த பைக் இயங்கும். முற்றிலும் ராயல் என்ஃபீல்டின் ரெட்ரோ ஸ்டைல் வடிவமைப்பு கவர்வதாய் உள்ளது. புதிய அப்டேட் ஆக டிஜிட்டல் க்ளஸ்டர் இருப்பது சிறப்பு அம்சம். பழங்கால தண்டர்பேர்டு 350X போல பெட்ரோல் டேங்க் நிறத்திலேயே ரிம் டேப் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை 1.68 லட்சம் ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: இந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..!