புதிய வண்ண விருப்பங்களில் வெளியாகிறது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350: இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!

ராயல் என்ஃபீல்ட்

இந்தியன் ஆட்டோஸ் வலைப்பதிவின் படி, ஒற்றை இருக்கை மாதிரி இன்னும் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

  • Share this:
நீங்கள் இந்தியாவில் எந்த இடத்திற்கு பயணம் செய்தாலும், அங்குள்ள சாலையில் காட்டாயம் ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக் செல்வதை காணலாம். அந்தளவுக்கு ராயல் என்பீல்ட் பைக் பிரியர்கள் இந்தியாவில் அதிகம் இருக்கின்றனர். அப்படி இந்த குறிப்பிட்ட பைக் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது சென்னையை தளமாகக் கொண்ட 2 சக்கர வாகன நிறுவனமானது அதன் கிளாசிக் 350 மாடலில் குறைந்தது 4 புதிய வண்ணத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் மோட்டார் வாகன சந்தையை முழுமையாகக் கைப்பற்ற நிறுவனம் மற்றொரு முயற்சியை எடுத்து வைத்துள்ளது என்று சொல்லலாம். சமீபத்தில் கசிந்த சில புகைப்படங்களின்படி, வரவிருக்கும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இப்போது சில புதிய வண்ணத் விருப்பங்களையும் மற்றும் பல புதிய மாற்றங்களையும் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. வண்ணங்களும் பைக்கின் மாறுபாட்டைப் பொறுத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரைவில் வெளியாகவுள்ள புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஒற்றை இருக்கை மற்றும் இரட்டை பிளவு இருக்கை உள்ளமைவு என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். இதில் வாடிக்கையாளர்கள் டூயல்-டிஸ்க் கான்பிகரேஷன் மற்றும் ரியர் டிரம் பிரேக் விருப்பத்திற்கு இடையே தேர்வு செய்துகொள்ள முடியும். 2019 கிளாசிக் 350 இன் ஒற்றை இருக்கை வெர்சனில் பியூயல் டேங்க், சைடு பேனல்கள் மற்றும் இரண்டு ஃபெண்டர்களிலும் புதிய கிராபிக்ஸ் கொண்ட மிக அதிநவீன மற்றும் அழகான பச்சை வண்ணம் இருக்கும். இந்த மாதிரியை டேங்கின் பிடியிலும் காணலாம். இது கூடுதல் பொருளாக வழங்கப்படலாம்.

இந்தியன் ஆட்டோஸ் வலைப்பதிவின் படி, ஒற்றை இருக்கை மாதிரி இன்னும் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என்று கூறப்பட்டுள்ளது. அவை டார்க் மேட் கிரே மற்றும் டெசர்ட் ஸ்ட்ரோம் ஆகும். இந்த பதிப்புகள் அலாய் மற்றும் வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் வரும். இதற்கு மாறாக புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இன் இரட்டை இருக்கை டிரிம், குரோம் எக்சாஸ்ட் மற்றும் ப்ளாக் ரிம்களுடன் பளபளப்பான டார்க் கிரே வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

Also read... அறிமுகத்துக்கு முன்பே தொடங்கிய முன்பதிவு: ஹோண்டா அமேஸ் காரின் அம்சங்கள் என்ன?

இருப்பினும், மோட்டார் சைக்கிள் பயன்பற்றிக்கு வெளியிடப்படும் போது தான், ​​இந்த மாடலுக்கு இன்னும் பல கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்தைப் பொறுத்தவரை, புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இப்போது ஷோரூம்களுக்கே வந்திருக்க வேண்டும். இருப்பினும், COVID-19 பாதிப்பு எல்லாவற்றையும் நிச்சயமாக தாமதப்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராயல் என்ஃபீல்ட்


இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், புதிய மோட்டார் சைக்கிள் இம்மாத இறுதியில் அல்லது வரும் வாரங்களில் வெளியீட்டிற்கு வரும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: