இன்னோவாவுக்கு போட்டியாக களமிறங்கும் மகேந்திராவின் புதிய கார்

news18
Updated: September 2, 2018, 5:32 PM IST
இன்னோவாவுக்கு போட்டியாக களமிறங்கும் மகேந்திராவின் புதிய கார்
மகேந்திரா
news18
Updated: September 2, 2018, 5:32 PM IST
மகேந்திரா ஆட்டோமொபைல் நிறுவனம் தன்னுடைய புதிய காரான மராசோவை வரும் செப்டம்பர் 3-ம் தேதி அறிமுகப்படுத்துகிறது.

மகேந்திரா நிறுவனம் டொயொட்டா இன்னொவா கிரிஸ்டாவுக்கு போட்டியாக `மராசோ’ என்ற புதிய காரை செப்டம்பர் 3-ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. 7 மற்றும் 8 இருக்கைகள் என இரு வகைகளில் வெளிவரும் இந்தக் காரின் இன்னெர் கேபின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
இந்த புதிய மராசோவின் டேஷ்போர்ட் ‘டி' வடிவ கன்ஸோல் கொண்டது. இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ உள்ளிட்ட ஆடியோ சிஸ்டத்தை சப்போர்ட் செய்யும், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட மியூசிக் சிஸ்டமும் உள்ளது.

காரின் வெளிப்புறத்தைப் பொறுத்தவரை, முன்னால் உள்ள கிரில் சுறா மீனின் பற்களை போலவும், டெயில் லாம்புகள் ஷார்க் டெய்லை போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.Loading...

1.6 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட இந்த மராசோ 125 ஹெச்.பி சக்தி கொண்டது. மேலும், இந்த புதிய கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வகையிலும் வெளிவரும் என தெரிகிறது. இந்தக் காரின் விலை 15 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: September 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...