அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே ஆன்லைனில் லீக்கான Hyundai Alcazar SUV காரின் விவரங்கள்!

ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி

டைகா பிரவுன் மற்றும் ஸ்டாரி நைட்ஷேட்ஸ் உள்ளிட்ட இரு கலர்கள் ஹூண்டாய் அல்கசார் கார் அறிமுகத்துடன் அவையும் அறிமுகமாகின்றன.

  • Share this:
தென் கொரியாவின் சியோலை தலைமையிடமாக கொண்ட ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், விரைவில் இந்தியாவில் தனது புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே இந்த புதிய மாடல் எஸ்யூவி காரில் அடங்கி உள்ள பல முக்கிய தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இந்த மாத இறுதியில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது ஹூண்டாய் அல்கசார் (Hyundai Alcazar) என்ற காரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆன்லைனில் லீக்காகி உள்ள ஆவணங்களில் அடங்கி உள்ள தகவல்களின் படி, ஹூண்டாயின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி-யானது ( hyundai alcazar suv ) வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 6 கலர் ஸ்கீம்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. கார்டெக்கோ.காமில் (Cardekho.com) வெளியாகி உள்ள ஒரு அறிக்கையின்படி, இந்த கார் பாண்ட்டம் பிளாக் (Phantom Black), டைகா பிரவுன் (Taiga Brown), டைபூன் சில்வர் (Typhoon Silver), டைட்டன் கிரே (Titan Grey), போலார் ஒயிட் (Polar White) மற்றும் ஸ்டாரி நைட் ஷேட்ஸ் ( Starry Night shades) உள்ளிட்ட கலர்களில் விற்பனைக்கு வர உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கண்டதில் பெரும்பாலான கலர் ஆப்ஷன்கள் ஏற்கனவே ஹூண்டாய் கிரெட்டா காரில் கிடைத்தாலும், டைகா பிரவுன் மற்றும் ஸ்டாரி நைட்ஷேட்ஸ் உள்ளிட்ட இரு கலர்கள் ஹூண்டாய் அல்கசார் கார் அறிமுகத்துடன் அவையும் அறிமுகமாகின்றன. அதே போல இந்த காரின் உட்புறத்தை பொறுத்த வரை, கோக்னாக் பிரவுன் (Cognac Brown) கலர் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 கலர்களில் அறிமுகமாக உள்ள ஹூண்டாய் அல்கசார், 6 வகை வேரியன்ட்களிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன்படி சிக்னேச்சர், சிக்னேச்சர் (O), பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் (O), பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் (O) உள்ளிட்ட ஆறு வேரியன்ட்கள் அடங்கும்.

Also read... டெல்லி ஏர்போட்டில் தடுப்பூசி மையம் - 60,000 தடுப்பூசி செலுத்த திட்டம்!

இந்த வேரியன்ட்களில் பெரும்பாலானவை 6 சீட்கள் ஆப்ஷனுடன் கிடைக்கும் அதே நேரத்தில் பிரெஸ்டீஜ் மற்றும் பிளாட்டினம் வேரியன்ட்கள் 7 சீட்கள் ஆப்ஷனுடன் விறபனைக்கு வர உள்ளது. இதிலும் பிரெஸ்டீஜ் வேரியன்ட் மட்டுமே 6 மற்றும் 7 சீட்கள் ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். மேலும் இந்த எஸ்யூவி-யின் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் 6 மற்றும் 7 சீட்களின் வடிவமைப்பு கிடைக்கும். இதற்கிடையே ஹூண்டாய் அல்கசாரின் ஆப்ஷனல் வேரியன்ட்ஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படும். பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் (O) வேரியன்ட்கள் 6 இருக்கைகள் வடிவமைப்புடன் தரமாக வழங்கப்படும் ரேஞ்ச்-டாப்பிங் வகைகளாக தெரிகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் பதிப்பில் வெளிவரும் இந்த மாடல் கார், வெறும் 10 வினாடிகளில் ஜீரோவிலிருந்து 100 கி.மீ வேகத்தில் செல்ல கூடியது என்றும் கூறப்படுகிறது. ஹூண்டாய் அல்கசார் 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும், இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்ச சக்தி 159 பிஎஸ் மற்றும் 192 என்எம் பீக் டார்க் (peak torque) வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஸ்யூவிக்கு 115 பிபிஎஸ் மற்றும் 250 என்எம் அதிகபட்ச வெளியீட்டைப் பெறுகிறது. 2 என்ஜின்களும் 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படுகின்றன. மல்டி ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உட்பட பல நவீன அம்சங்களை கொண்ட ஹூண்டாய் அல்கசார் கார்களின் விலை ரூ.13 முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: