புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் விரைவில் வெளியாகிறது ஹோண்டா பைக், ஸ்கூட்டர்கள்!

மாதிரி படம்

கடந்த சில ஆண்டுகளாக, மற்ற நிறுவனங்களின் வெளியீடுகள் காரணமாக ஹோண்டா இரு சக்கர வாகனம் கடுமையான போட்டியைத் எதிர்கொண்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹோண்டா நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன பிராண்டுகளில் ஒன்றாகும். ஜப்பானிய பிராண்ட் அதன் நம்பகமான இயந்திரங்கள் மற்றும் செயல்திறனுக்காக மக்களால் விரும்பப்படுகிறது. உண்மையில், ஹோண்டா நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் பிராண்டுகளில் ஒன்றாகும். ஆக்டிவா 110 மற்றும் ஆக்டிவா 125 ஆகியவை அந்தந்த பிரிவுகளில் அதிகம் விற்பனையாகும் வாகனங்கள் ஆகும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, மற்ற நிறுவனங்களின் வெளியீடுகள் காரணமாக ஹோண்டா இரு சக்கர வாகனம் கடுமையான போட்டியைத் எதிர்கொண்டது. அதிக விற்பனையை அதிகரிக்க, பல இரு சக்கர வாகன பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளை புதிய அம்சங்களுடன் வழங்கி வருகின்றனர்.

அதில், புளூடூத் வழியாக ஸ்மார்ட்போன் இணைப்பு ஒரு முக்கிய அம்சமாகும். இந்த விதி இப்போது இந்தியாவில் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் மற்றும் நுழைவு-நிலை செயல்திறன் மோட்டார் சைக்கிள்களில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. இதையடுத்து, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) விரைவில் தனது தயாரிப்புகளில் புளூடூத் இணைப்பு முறையை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஹோண்டா 'RoadSync' என்ற பெயரில் ஒரு வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்திருந்தது. அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதன் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது.

டி.வி.எஸ், ராயல் என்ஃபீல்ட், ஹீரோ மோட்டோகார்ப், சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா போன்ற பல முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் வெகுஜன சந்தை தயாரிப்புகளில் புளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்குகின்றன. தற்போது மோட்டார் சந்தையில் ஒரு புரட்சியை உருவாக்க ஹோண்டா நிறுவனமும் அதே அம்சத்தில் கவனம் செலுத்துகிறது.

ஒரு வாகனத்தின் புளூடூத் கனெக்ட்டிவிட்டி செயல்பாடு ஸ்மார்ட்போன் சாதனத்துடன் இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் அலெர்ட்ஸ், எஸ்எம்எஸ் அலெர்ட் போன்ற பல அம்சங்களை கனெக்ட்டிவிட்டி செயல்படுத்துகிறது. ஹோண்டா ரோட்ஸின்க் (Honda RoadSync) கனெக்ட்டிவிட்டியும் இதே போன்ற செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்படலாம்.

இந்த ப்ளூடூத் அம்சத்துடன் சில முக்கிய ஹோண்டா தயாரிப்புகளான கிரேசியா 125, ஹார்னெட் 2.0, எக்ஸ்-பிளேட் போன்றவை வெளியாகவுள்ளன. அதுமட்டுமல்லாமல் நிறுவனத்தின் பிக்விங் டீலர்ஷிப் மூலம் விற்கப்படும் நிறுவனத்தின் பிரீமியம் இரு சக்கர வாகனத்திலும் இதை அறிமுகப்படுத்தலாம். CRF1100L ஆப்பிரிக்கா ட்வின் போன்ற சில உயர்மட்ட மோட்டார் சைக்கிள்கள் ஏற்கனவே மிகவும் மேம்பட்ட ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

Also read... பாதியாக குறையவிருக்கும் எலக்ட்ரிக் கார்களின் விலை - எப்போ தெரியுமா?

ஹோண்டா ரோட்ஸின்க் அம்சம் ஆப்ஷனல் கிட்டின் ஒரு பகுதியாக அல்லது ஸ்டாண்டர்ட் கிட்டின் ஒரு பகுதியாகவோ வழங்கப்படலாம். மேலும் இந்த புதிய மாசம் குறித்த விவரங்கள் எதிர்காலத்தில் வெளிவர வாய்ப்புள்ளது. இந்த கனெக்ட்டிவிட்டி அம்சத்தை சேர்ப்பது ஹோண்டா பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஒட்டுமொத்த தொகுப்புக்கு அதிக மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் அதிக நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: